கொளுத்தும் வெயில் : ஒடிசாவில் காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே பள்ளிகள் இயங்கும்..!

இந்தியா

கொளுத்தும் வெயில் : ஒடிசாவில் காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே பள்ளிகள் இயங்கும்..!

கொளுத்தும் வெயில் : ஒடிசாவில் காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே பள்ளிகள் இயங்கும்..!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வெப்பக்காற்று வீசுவதால் மக்கள் கடுமையாக தவித்துவரும் நிலையில், இதன் காரணமாக ஒடிசாவில் கடந்த வாரம் பள்ளிக்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கடந்த வாரம் சனிக்கிழமை வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்த மாநில கல்வித்துறை உத்தரவிட்டிருந்த நிலையில், இந்த வாரம் மீண்டும் பள்ளிகள் திறப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக மாநில கல்வித்துறையின் முதன்மை செயலாளர் பிபி சேத்தி கூறுகையில், ஒடிசாவில் காலை 8.30 மணி அளவிலேயே வெப்பநிலை 32 முதல் 34 டிகிரியை எட்டியுள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் வழக்கமான நேரத்தில் பள்ளிக்கு வந்து செல்வது சிரமமாகியுள்ளது. எனவே, காலை ஆறு மணிக்கே பள்ளி வகுப்புகள் தொடங்கப்பட்டு, உணவை காலை 9 மணிக்கே வழங்கி, அத்துடன் பள்ளியை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாணவர்கள் கல்வி கற்பதில் தடையில்லாமல், அவர்களின் மத்திய உணவும் உறுதி செய்யப்படும். அத்துடன் பெரும்பாலானே அரசு பள்ளிகள் மாணவர்களின் வீடுகளுக்கு நடந்து செல்லும் அருகாமையில் உள்ளதால் அவர்களுக்கு வெப்ப பாதிப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும் என்றார்.

இதையடுத்து ஒடிசாவில் இன்று மாணவர்கள் காலை ஆறு மணிக்கு முன்னதாகவே பள்ளிக்கு வருகை தந்தனர்.ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை 44 டிகிரிக்கும் மேல் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக டிடிலாகர் பகுதியில் 44.5 டிகிரியும், போலாங்கிர் மற்றும் பௌத் பகுதியில் 45 டிகிரி வெப்பமும் பதிவாகியுள்ளது. மேலும், 21க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 40 டிகிரிக்கும் மேல் வெப்பம் பதிவாகியுள்ளது.

அதேவேளை, அடுத்த சில நாள்கள் ஒடிசாவின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது அனல் காற்றால் தவித்து வரும் அம்மாநில மக்களுக்கு ஓரளவு நிம்மதியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave your comments here...