விவியன் ரிச்சர்ட்ஸிற்கு பிறகு தோனியே ஸ்டைலான ஆட்டக்காரர் நெட்டிசன்களின் கேள்விகளுக்கு சரவெடியாக பதில் தந்த சத்குரு!

இந்தியா

விவியன் ரிச்சர்ட்ஸிற்கு பிறகு தோனியே ஸ்டைலான ஆட்டக்காரர் நெட்டிசன்களின் கேள்விகளுக்கு சரவெடியாக பதில் தந்த சத்குரு!

விவியன் ரிச்சர்ட்ஸிற்கு பிறகு தோனியே ஸ்டைலான ஆட்டக்காரர் நெட்டிசன்களின் கேள்விகளுக்கு சரவெடியாக பதில் தந்த சத்குரு!

#AMAwithSadhguru – ‘என்னிடம் என்ன வேண்டுமானால் கேளுங்கள்’ என்ற ஹாஸ் டேக்கில் நேற்று (மே 1) ட்விட்டரில் நடந்த சத்குருவுடனான கேள்வி பதில் பதிவுகள் இந்திய அளவில் ட்ரெண்ட் அடித்தன.

எந்த கேள்வி கேட்டாலும் அதை நேர்த்தியாக எதிர்கொண்டு பதில் சொல்வதில் வல்லவரான சத்குரு, நெட்டிசன்கள் கேட்ட பல விதமான கேள்விகளுக்கு பளிச் பளிச் என்று பதில் அளித்தார். ‘உங்களை கிண்டல் செய்யும் ட்ரோலர்களிடம் உங்களுக்கு பிடித்த ஒரு விஷயம் என்ன?, ‘பைக் ஓட்டும் போது என்ன மாதிரியான யோகா செய்கிறீர்கள்?’ ‘உங்களுக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் யார்?’ ‘நீங்கள் சுடும் தோசையை என் கணவர் சாப்பிட விரும்புகிறார், எப்போது அது நடக்கும்?’… இப்படி ரக ரகமான கேள்விகளுக்கு தனக்கே உரித்தான நகைச்சுவை உணர்வுடன் ஆழமான கருத்துக்கள் அடங்கிய பதில்களை விரைந்து அளித்தார்.

அதில் சில சுவராஸ்யமான கேள்வி பதில்கள்:

ப்ராச்சி: உங்களுக்கு எப்போதும் பிடித்த கிரிக்கெட் பேட்ஸ்மேன் யார்?

சத்குரு: விவியன் ரிச்சர்ட்ஸ். தற்போதைய தலைமுறையில் தோனி மட்டுமே அவரை போல் ஸ்டைலாக சிக்ஸர்கள் விளாசும் திறனை கொண்டுள்ளார்.

கரண் கிருஷ்ணமூர்த்தி: சத்குரு நாங்கள் உங்களை எல்லா விதமான செயல்களிலும் பார்த்து வருகிறோம். சமைக்கிறீர்கள், நடனம் ஆடுகிறீர்கள், கொள்கைகளை உருவாக்க செயல் செய்கிறீர்கள்…சினிமாவில் உங்களை பார்க்கும் பெருமை எங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளதா?

சத்குரு: நான் என்னுடைய வாழ்க்கையை மிகவும் தீவிரமாக வாழ்கிறேன். வாழ்வின் எதார்த்தம் என்னை மிகவும் பங்களிப்போடு பிஸியாக வைத்துள்ளது. ஆகவே, நடிப்பதற்கு எனக்கு நேரமில்லை.

விபூதி நாராயண்: எல்லா நிகழ்ச்சிகளுக்கும் எப்படி சரியான நேரத்திற்கு நீங்கள் செல்கிறீர்கள்? எல்லா வழிகளில் முயற்சித்தாலும், என்னால் சரியான நேரத்திற்கு வகுப்பறைக்கு செல்ல முடியவில்லை.

சத்குரு: ஒரு விஷயம் உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தால் நீங்கள் அங்கு எப்போதும் சரியான நேரத்தில் இருப்பீர்கள். வாழ்வில் உங்களுக்கு முக்கியம் என்று தோன்றாத எதையும் நீங்கள் செய்யாதீர்கள்.

ஆனந்த் ஹரிதாஸ்: சத்குரு, உங்களை கிண்டல் செய்யும் நபர்களிடம் (ட்ரோலர்கள்) நீங்கள் விரும்பும் ஒரு விஷயம் என்ன?

சத்குரு: நான் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் அவர்கள் கவனிக்கிறார்கள். அந்த உறுதி தான். இந்த நேரத்திலும் நீங்கள் என்னை எந்தளவுக்கு கிண்டல் செய்ய முடியுமோ செய்து கொள்ளுங்கள். ஆனால், மண் வளத்தை பாதுகாப்பதில் உங்களுக்கு இருக்கும் அக்கறையை கொஞ்சம் வெளிப்படுத்துங்கள்.

தீக்ஷா: தொடர்ந்து பைக்கு ஓட்டும் போது ஏற்படும் அழுத்தத்தை எப்படி சமாளிக்கிறீர்கள்? எங்கு சென்றாலும், எல்லோரிடமும் சிரித்த முகத்துடன் எப்படி உற்சாகம் அளிக்கிறீர்கள்?

சத்குரு: என் உடலில் ஏற்படும் வலியால் என் முகத்தில் தோன்றும் புன்னகையை ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால், அது வேறு ஒரு மூலத்தில் இருந்து வருகிறது. இன்னும் ஆழமாக தேடுங்கள்.


FO_MUc07Q&s=19

ரவிகாந்த்: இந்த 100 நாட்களுக்கு பிறகும் மண் காப்போம் என்ற செய்தியை எப்படி உயிர்ப்புடன் வைத்திருப்பது அடுத்த 10 முதல் 15 வருடங்களில் களத்தில் செயல் நடப்பதற்கும் அதற்கு தேவையான கொள்கைகள் உருவாக்கவும் நாங்கள் எப்படி பங்காற்றுவது?

சத்குரு: பொறுப்பான குடிமக்கள் அனைவரும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முதல்வர்கள், நாட்டின் பிரதமர்கள் இதை மறக்காமல் இருப்பதை உறுதி செய்ய கடிதங்கள் எழுதுங்கள்.

மண் வளத்தை பாதுகாக்க அரசாங்கங்கள் சட்டங்கள் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி சத்குரு 100 நாட்களுக்கு 30,000 கி.மீ தனி ஆளாக மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். ஐரோப்பா நாடுகளில் பயணத்தை நிறைவு செய்துள்ள அவர் தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் பயணம் செய்து வருகிறார். அவர் தனது பிஸியான பயணத்திற்கு இடையே ட்விட்டரில் நடந்த இந்த கேள்வி பதில் நிகழ்வில் பங்கேற்றார்.

Leave your comments here...