மதவழிபாட்டு தளங்களில் அதிக ஒலி எழுப்பும் 45 ஆயிரத்திற்கும் அதிகமான ஒலிப்பெருக்கிகள் அகற்றம்..!

இந்தியா

மதவழிபாட்டு தளங்களில் அதிக ஒலி எழுப்பும் 45 ஆயிரத்திற்கும் அதிகமான ஒலிப்பெருக்கிகள் அகற்றம்..!

மதவழிபாட்டு தளங்களில் அதிக ஒலி எழுப்பும் 45 ஆயிரத்திற்கும் அதிகமான ஒலிப்பெருக்கிகள் அகற்றம்..!

உத்தரபிரதேசத்தில் மத வழிபாட்டு தளங்களில் பயன்படுத்தும் ஒலிப்பெருக்கிகள் பிறருக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடாது என அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கடந்த 18-ம் தேதி தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து மதவழிபாட்டு தளங்களில் ஒலிப்பெருக்கியின் ஒலி அளவை குறைக்கும்படியும், அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பெருக்கிகளை ஏப்ரல் 30-ம் தேதிக்குள் (நேற்று) அகற்றும்படியும் மாநில உள்துறை கடந்த 23-ம் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவையடுத்து மாநிலம் முழுவதும் மத வழிபாட்டு தளங்களில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பெருக்கிகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வந்தது.இந்நிலையில், மாநிலம் முழுவதும் கடந்த 7 நாட்களில் மத வழிபாட்டு தளங்களில் அதிக ஒலி எழுப்பும் வகையில் பொருத்தப்பட்டிருந்த 45 ஆயிரத்து 773 ஒலிப்பெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...