ஈஷாவின் வழிகாட்டுதலில் இயங்கும் ஸ்ரீவேலாயுதசாமி எஃப்.பி.ஓ.வின் தேங்காய் விற்பனை தொடக்கம்..!

தமிழகம்

ஈஷாவின் வழிகாட்டுதலில் இயங்கும் ஸ்ரீவேலாயுதசாமி எஃப்.பி.ஓ.வின் தேங்காய் விற்பனை தொடக்கம்..!

ஈஷாவின் வழிகாட்டுதலில் இயங்கும் ஸ்ரீவேலாயுதசாமி எஃப்.பி.ஓ.வின் தேங்காய் விற்பனை தொடக்கம்..!

ஈஷா அவுட்ரீச் அமைப்பின் வழிகாட்டுதலில் செயல்படும் ஸ்ரீவேலாயுதசாமி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தனது முதல் விற்பனையை (ஏப்ரல் 29) வெற்றிகரமாக தொடங்கியது.

இந்நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரும் விவசாயியுமான புனிதன் அவர்களின் தோட்டத்தில் விளைந்த ரூ.2.5 லட்சம் மதிப்புமிக்க 10 டன் தேங்காய்களை விற்பனைக்கு அனுப்பும் நிகழ்ச்சி கிணத்துக்கடவில் இன்று நடைபெற்றது

இதில் கோவை மாவட்ட ரோட்டரி கவனர் ராஜசேகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “இந்தியாவில் மொத்தம் 10 ஆயிரம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உள்ளன. அதில் 50 சதவீதம் நிறுவனங்கள் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ளன. அதற்கு அடுத்தப் படியாக சுமார் 700 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் நம் தமிழ்நாட்டில் உள்ளன. இந்த எண்ணிக்கையை நாம் இன்னும் அதிகரிக்க வேண்டும்.

ஈஷாவின் வழிகாட்டுதலில் தொண்டாமுத்தூரில் தொடங்கப்பட்ட வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாநில அரசின் விருதையும் பெற்றுள்ளது. அதேபோல், ஸ்ரீ வேலாயுதசாமி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் நன்கு வளர்ச்சி அடைந்து பல சாதனைகளை புரிய வேண்டும். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ வேலாயுதசாமி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் நாராயணசாமி, வெள்ளியங்கிரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் குமார், ரோட்டரி சங்க செயலாளர் ஸ்ரீராம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தில் கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த 351 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...