ஆளுநரிடம் பகிரங்க மன்னிப்பு கேளுங்கள் இல்லை முதல்வர் விலக வேண்டும் – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

அரசியல்

ஆளுநரிடம் பகிரங்க மன்னிப்பு கேளுங்கள் இல்லை முதல்வர் விலக வேண்டும் – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

ஆளுநரிடம் பகிரங்க மன்னிப்பு கேளுங்கள் இல்லை முதல்வர் விலக வேண்டும் – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

தெலங்கானா மாநிலத்தில் நடைபெறவுள்ள புஷ்கர விழாவில் பங்கேற்க மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தொன்மைவாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானம் ஞானரத யாத்திரையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று துவக்கி வைத்தார்.

நீட் தேர்வு, ஏழு தமிழர் விடுதலை உள்ளிட்ட 18 மசோதாக்களும், தீர்மானங்களும் முடக்கப்பட்டுள்ளன. ஆர்எஸ்எஸ் சிந்தனையைப் போற்றுகிற ஒரு ஆளுநரை ஆதீன நிகழ்ச்சிக்கு அழைத்திருப்பது தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்கு நல்லது அல்ல என்று கூறி என்று திக, திவிக, விசிக, சிபிஐ, சிபிஎம் கட்சியினர் கோரிக்கை வைத்து போராட்டம் செய்தனர். இந்த போராட்டத்தின் போது ஆளுநர் வாகனம் மீது கருப்பு கொடி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் சிவந்தி ஆதித்தனாரின் 9 வது நினைவு தினத்தை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், மயிலாடுதுறையில் ஆளுநர் ஆர்.என்.ரவி வாகனம் சென்ற போது ஆளுநரின் வாகனம் மீது திமுகவை சார்ந்தவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி தொண்டர்கள் கல்லை எரிந்து, கருப்புக் கொடியை வீசியிருக்கிறார். தமிழக முதல்வரால் ஆளுநருக்கு கூட பாதுகாப்பு வழங்க முடியவில்லை எனவே முதல்வர் இன்று மாலைக்குள் பதவி விலக வேண்டும் இல்லையென்றால் ஆளுநரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் பெண்களுக்கான பாதுகாப்பை பொருத்தவரையிலும் திமுக ஆட்சியில் இந்த 10 மாதங்கள்தான் மிக மோசமான மாதங்களாக இருக்கிறது, ஆளுநரை அவமதித்த விவகாரத்தில் மாநில முதலமைச்சர் கண்ணை கட்டிக் கொண்டு இருக்கிறார். இது தொடர்பாக அவருக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போயுள்ளது, ஆளுநருக்கு பாதுகாப்பு நடவடிக்கை ஏன் சரியாக எடுக்கவில்லை என்று விளக்கம் அளிக்க வேண்டும். உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி இருக்கிறோம் என்றார்.

Leave your comments here...