இந்திய ராணுவ தளபதியாக ‘ராணுவ இன்ஜினியர்’ முதல்முறையாக நியமனம்..! யார் இந்த ஜெனரல் மனோஜ் பாண்டே?

இந்தியா

இந்திய ராணுவ தளபதியாக ‘ராணுவ இன்ஜினியர்’ முதல்முறையாக நியமனம்..! யார் இந்த ஜெனரல் மனோஜ் பாண்டே?

இந்திய ராணுவ தளபதியாக ‘ராணுவ இன்ஜினியர்’ முதல்முறையாக நியமனம்..! யார் இந்த ஜெனரல் மனோஜ் பாண்டே?

இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக தற்போதைய துணை தலைமை தளபதி மனோஜ் பாண்டே நியமிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய தளபதி முகுந்த் நரவனேவின் பதவிக்காலம் இம்மாத இறுதியில் முடிவடைகிறது. இதையடுத்து நரவனேவுக்கு அடுத்து சீனியராக உள்ள மனோஜ் புதிய தளபதியாக நியமிக்கப்படவுள்ளார்.

இந்திய ராணுவத்தின் கிழக்குப் பிரிவு கமான்டராக இருந்த மனோஜ் கடந்த பிப்ரவரி மாதம் ராணுவத்தின் துணை தலைவராக நியமிக்கப்பட்டார்.துணை தலைவர் பதவியிலிருந்த ஜெனரல் மோஹாந்தி ஓய்வு பெற்றதால் மனோஜ்க்கு இந்த புதிய பொறுப்பு வழங்கப்பட்டது.கடந்த சில மாதங்களில் மனோஜ்ஜின் சீனியர்களான தளபதி ராஜ் சுக்லா, தளபதி வைகே ஜோஷி ஆகியோர் ஓய்வு பெற்ற நிலையில், சீனியாரிட்டியின் அடிப்படையில் புதிய தலைவர் ஆகும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது.

1982ஆம் ஆண்டு முதல் ராணுவத்தில் பணியாற்றி வரும் மனோஜ் பாண்டே, அந்தமான் நிக்கோபர் பிரிவின் கமான்டராகவும் இருந்துள்ளார். பல்வேறு எதிர்த்தாக்குதல் நடவடிக்கைகளை வெற்றிகரமாக தலைமை தாங்கி நடத்தியுள்ள மனோஜ் பாண்ட, அனைத்து விதமான பூகோள அமைப்பிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டுள்ளார்.

புதிய ராணுவ தளபதியாக மனோஜ் பதவியேற்கும் பட்சத்தில் இப்பதவிக்கு வரும் முதல் இன்ஜியர் இவர் என்ற பெருமையும் பெறுகிறார். இவர் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்தவராவார்.அதேவேளை, முப்படை தலைமை தளபதி பதவி நியமனம் குறித்த உறுதியான தகவல் இதுவரை வெளியாகவில்லை. ஓய்வு பெறும் ராணுவ தளபதி நரவனே தான் அடுத்த முப்படை தலைமை தளபதி என்ற பேச்சு தொடர்ந்து எழுந்து வருகிறது. நாட்டின் முதல் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் கடந்த டிசம்பர் மாதம் ஊட்டியில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார்.

இதையடுத்து இந்த பதவி நான்கு மாதமாக காலியாக உள்ளது. இந்த பதவி நியமன விதியில் சில மாற்றங்களை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave your comments here...