ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் வன்முறை – இதுவரை 14 பேர் கைது..!

இந்தியா

ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் வன்முறை – இதுவரை 14 பேர் கைது..!

ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில்  வன்முறை – இதுவரை 14 பேர் கைது..!

டில்லியில் ஜஹாங்கிர்புரி பகுதியில் நேற்று (ஏப்.,16) நடந்த ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் பங்கேற்றோர் மீது, மற்றொரு தரப்பினர் கல்வீச்சில் ஈடுபட்டதால் வன்முறை ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் பல வாகனங்கள் மர்மநபர்களால் அடித்து நொறுக்கப்பட்டன. கலவரத்தின் போது அங்கு பாதுகாப்பிற்கு வந்த போலீசார் அவர்களை கட்டுப்படுத்தினர். கல்வீச்சில் போலீசார் உள்பட பலர் காயமடைந்தனர். கலவரத்தையொட்டி அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

இந்த வன்முறை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டில்லியின் உயர் போலீஸ் அதிகாரிகளை உடனடியாக தொடர்பு கொண்டு வன்முறையை கட்டுப்படுத்த உத்தரவிட்டார். மேலும், வன்முறை தொடர்பாக விசாரணை நடத்த தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வன்முறை குறித்து இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave your comments here...