திமுக ஆட்சியில் தெய்வங்களும் மகிழ்ச்சியாக இருக்கும் சூழல் நிலவுகிறது – அமைச்சர் சேகர்பாபு..!

தமிழகம்

திமுக ஆட்சியில் தெய்வங்களும் மகிழ்ச்சியாக இருக்கும் சூழல் நிலவுகிறது – அமைச்சர் சேகர்பாபு..!

திமுக ஆட்சியில் தெய்வங்களும் மகிழ்ச்சியாக இருக்கும் சூழல் நிலவுகிறது – அமைச்சர் சேகர்பாபு..!

சட்டசபையில் , வினாக்கள் விடைகள் நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, 12 ஆண்டுகள் கழிந்தும், ஆகம விதிப்படி குடமுழுக்கு நடத்தப்படாத கோயில்களுக்கு, விரைவில் குடமுழுக்கு நடத்த நடப்பு நிதியாண்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், கேட்காததையும் செய்யும் அரசாக திமுக அரசு உள்ளது என்றும், தெய்வங்களும் மகிழ்ச்சியாக இருக்கும் நல்ல சூழல், தி.மு.க. ஆட்சியில் நிலவுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், திருநீர்மலை, திருக்கழுக்குன்றம், திருச்சி, மலைக்கோட்டை விநாயகர் கோவிலுக்கு ரோப்கார் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என கூறிய அவர், திருத்தணி முருகன் கோயிலில் மாற்றுப்பாதை அமைப்பது பற்றி ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன், மாநிலம் முழுவதும் 507 கோவில்களில், 907 பணிகள் ரூ.664 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறிய அவர், இன்னார் இனியவர் என்று பாராமல், யார் சிபாரிசு செய்தாலும் வேறுபாடு பார்க்காமல் பணிகளை செய்து தர முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும், பகவதியம்மன் கோயிலில் முந்தைய ஆட்சியில் அனுமதி தரப்பட்டிருந்த எந்த பணிகளும் நிறுத்தப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்

சட்டப்பேரவையில் வினா விடைகள் நேரத்தில், குளித்தலை தொகுதி, அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயில் குடமுழுக்கு நடத்த அரசு ஆவன செய்யுமா என சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, 2008-ம் ஆண்டு குடமுழுக்கிற்கு பின், கடந்த ஆண்டு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதோடு, தொல்லியல் துறை மற்றும் மண்டல குழுவில் ஆலோசனை மேற்கொண்டு அனுமதி பெறவும், அடுத்த கட்டமாக வல்லுநர் குழு அனுமதிக்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்

மேலும், ரூ.1.25 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறிய அவர், வரும் 16-ந் தேதி ரோப்கார் வெள்ளோட்டம் நடைபெற உள்ளதாகவும், தொல்லியல் துறை அனுமதி பெற்று விரைவில் குடமுழுக்கு நடத்தப்படும் எனவும் உறுதியளித்தார்.பகவதியம்மன் கோயிலில் முந்தைய ஆட்சியில் அனுமதி தரப்பட்டிருந்த எந்த பணிகளும் நிறுத்தப்படவில்லை. இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

Leave your comments here...