தேசிய தூய்மையான காற்று திட்டம்: தமிழ்நாட்டிற்கு ரூ.233 கோடி ஒதுக்கீடு..!

இந்தியா

தேசிய தூய்மையான காற்று திட்டம்: தமிழ்நாட்டிற்கு ரூ.233 கோடி ஒதுக்கீடு..!

தேசிய தூய்மையான காற்று திட்டம்: தமிழ்நாட்டிற்கு ரூ.233 கோடி ஒதுக்கீடு..!

மத்திய அரசு 15-வது நிதி ஆணையத்தின் பரிந்துரையின் படி சென்னைக்கு ரூ 181 கோடி, மதுரைக்கு ரூ 31 கோடி மற்றும் திருச்சிராப்பள்ளிக்கு ரூ 21 கோடி என தமிழ்நாட்டிற்கு மொத்தம் ரூ 233 கோடி சென்ற நிதி ஆண்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடிக்கு 2021 மார்ச் 31 வரை ரூ 3.06 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் இணை அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். இதை தவிர, காற்று தர நிதியின் கீழ் சென்னை, மதுரை மற்றும் திருச்சிக்கு நிதி ரூ.11 கோடி என தமிழ்நாட்டிற்கு மொத்தம் ரூ 117 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அவர் தனது பதிலில் தெரிவித்தார்.

காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கான நகரம் சார்ந்த செயல் திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஆதரவாக தேசிய தூய்மையான காற்று திட்டத்தின் கீழ் நிதி வெளியிடப்படுகிறது. கண்காணிப்பு வலையமைப்பின் விரிவாக்கம், கட்டுமானம் மற்றும் இடிப்பு கழிவு மேலாண்மை வசதிகள், மோட்டார் பொருத்தப்படாத போக்குவரத்து உள்கட்டமைப்பு, பசுமை இயக்க மண்டலம், இயந்திர தெரு துடைப்பான்களின் பயன்பாடு, உரம் தயாரிக்கும் அலகுகள் போன்றவை இத்திட்டத்தில் அடங்கும்.

தேசிய தூய்மையான காற்று திட்டத்தின் கீழ், மத்திய அளவிலான வழிகாட்டுதல் குழு, கண்காணிப்புக் குழு மற்றும் அமலாக்கக் குழு ஆகியவை அமைக்கப்பட்டு, செயலாக்க முன்னேற்றம் குறித்து அவ்வப்போது ஆய்வு நடத்தப்படுகிறது.

மேலும், தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில அளவிலான வழிகாட்டுதல் குழு; சுற்றுச்சூழல் துறை முதன்மை செயலாளர் தலைமையில் கண்காணிப்பு குழு; நகர/மாவட்ட அளவிலான அமலாக்கக் குழு உள்ளிட்டவையும் செயல்படுகின்றன. தேசிய தூய்மையான காற்று திட்டத்தின் செயல்பாடுகளின் முன்னேற்றத்தை அவ்வப்போது இவை மதிப்பாய்வு செய்கின்றன.

Leave your comments here...