பெட்ரோலை தொடர்ந்து டீசலும் லிட்டர் ரூ.100-ஐ தாண்டியது…!

தமிழகம்

பெட்ரோலை தொடர்ந்து டீசலும் லிட்டர் ரூ.100-ஐ தாண்டியது…!

பெட்ரோலை தொடர்ந்து டீசலும் லிட்டர் ரூ.100-ஐ தாண்டியது…!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

அந்த வகையில் 137 நாட்களாக ஒரே விலையில் நீடித்து வந்த பெட்ரோல், டீசல் விலை கடந்த மாதம் 22-ம் தேதியில் இருந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 109 ரூபாய் 34 காசுகளுக்கும், டீசல் 99 ரூபாய் 42 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு 75 காசுகள் அதிகரித்து 110 ரூபாய் 9 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 100 ரூபாய் 18 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டுகிறது. பெட்ரோலை தொடர்ந்து டீசல் விலையும் லிட்டர் 100 ரூபாயை கடந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Leave your comments here...