வகுப்பறையில் கிடந்த 50 ரூபாய் : ஆசிரியையிடம் ஒப்படைத்த 6 வயது சிறுமிக்கு கிடைத்த கவுரவம்..!

தமிழகம்

வகுப்பறையில் கிடந்த 50 ரூபாய் : ஆசிரியையிடம் ஒப்படைத்த 6 வயது சிறுமிக்கு கிடைத்த கவுரவம்..!

வகுப்பறையில் கிடந்த 50 ரூபாய் : ஆசிரியையிடம் ஒப்படைத்த 6 வயது சிறுமிக்கு கிடைத்த கவுரவம்..!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பர்மா காலனியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு நேற்று வழக்கம் போல 1-ம் வகுப்பு மாணவி தீபா வந்திருந்தாள். வகுப்பறைக்கு சென்றபோது அங்கு 50 ரூபாய் நோட்டு கீழே கிடந்துள்ளது.

அதை பார்த்த சிறுமி, எடுத்து வைத்துகொண்டு, பின்னர் ஆசிரியை ராமலட்சுமி வகுப்பறைக்கு வந்தவுடன், அந்த 50 ரூபாய் நோட்டை அவரிடம் கொடுத்தாள். அப்போதுதான் ஆசிரியைக்கு, அதற்கு முந்தைய நாள் தன் 50 ரூபாயை தவறவிட்டது பற்றி ஞாபகம் வந்தது.

உடனே சிறுமி தீபா பிரபாவின் நேர்மையை பாராட்டி ஆசிரியை கைகுலுக்கினார். மற்ற மாணவ-மாணவிகளையும் கைதட்ட சொல்லி அவளை ஊக்கப்படுத்தினார். அதன்பிறகு மாணவியை தலைமை ஆசிரியர் ஞானசேகரிடம் அழைத்துச் சென்று, மாணவியின் செயலை கூறி உள்ளார்.

இதனால் வியந்த தலைமை ஆசிரியர் ஞானசேகர், மாணவியை கவுரவிக்க முடிவு செய்தார். 6 வயது சிறுமியின் நேர்மை மற்ற மாணவ-மாணவிகளுக்கும் ஒரு ஊக்கமாக இருக்க வேண்டும் என நினைத்தார். உடனே சிறுமி தீபா பிரபாவை தலைமை ஆசிரியர் தனது இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்தார். ஒருநாள் முழுவதும் தலைமை ஆசிரியராக இருக்கும்படி அந்த மாணவியிடம் எடுத்துக்கூறி கவுரவப்படுத்தினார். நேற்று பணி நேரம் முடியும் வரை சிறுமி, தலைமை ஆசிரியர் இருக்கையை அலங்கரித்தது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...