இனி 60 கி.மீ தூரத்திற்கு ஒரு சுங்கச்சாவடி – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.!

இந்தியா

இனி 60 கி.மீ தூரத்திற்கு ஒரு சுங்கச்சாவடி – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.!

இனி 60 கி.மீ தூரத்திற்கு ஒரு சுங்கச்சாவடி – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.!

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கிலோமீட்டர் தொலைவுக்கு ஒருமுறை மட்டுமே சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த புதிய நடைமுறை 3 மாதங்களில் அமலுக்கு வர உள்ளது. இதனால் 60 கிலோமீட்டருக்கு இடையேயான சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

மக்களவையில் சாலைகள் மறும் நெடுஞ்சாலைத்துறைக்கான பட்ஜெட்டில் நிதி ஒதுக்குவது குறித்து மக்களவையில் விவாதத்தின்போது நிதின் கட்கரி பதிலளித்தார்.

அப்போது பேசிய அவர், ‘டெல்லி – அம்ரிஸ்டர் – கத்ரா விரைவுச் சாலை தயாராகிக்கொண்டுள்ளது. டெல்லி – அம்ரிஸ்டர் இடையிலான சாலைப் பணி இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவு பெறும். இந்தத் தூரத்தை நான்கு மணி நேரத்தில் சென்றடைவதுபோல இருக்கும். அதேபோல, டெல்லி – ஜெய்பூர், டெல்லி – மும்பை, டெல்லி – டேராடூன் விரைவுச் சாலைகளும் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவுபெறும்.

ஜெய்ப்பூர், டேராடூன் சாலைகளின் பயண நேர இரண்டு மணி நேரமாக இருக்கும். அதேநேரத்தில் டெல்லி – மும்பை இடையிலான பயண தூரம் 12 மணி நேரமாக இருக்கும். ஸ்ரீநகர் – லே நெடுஞ்சாலையின் 11,650 அடி உயர ஷோஜி லா நெடுஞ்சாலையின் கீழ் அமையும் சுரங்கப்பாதை 2024-ம் ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு வரும்.

உத்ரகாண்ட் வழியாக மான்சரோவருக்குச் செல்லும் சாலைகள் 2023-ம் ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு வரும். சாலைப் பாதுகாப்பைப் பொறுத்தவரை தற்போது அனைத்து கார்களும் 6 ஏர் பேக்குடன்தான் பயன்பாட்டுவர வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

உலக வங்கி தமிழ்நாட்டுடன் இணைந்து பணி செய்துள்ளனர். அவர்கள் அதன் மூலம் சாலை விபத்துகளைக் குறைத்துள்ளனர். நாம் தமிழ்நாட்டு மாடலை செயல்படுத்த பார்க்கிறோம். 60 கி.மீ தூரத்துக்கு இடைவெளிக்குள் இருக்கும் சுங்கச்சாவடிகள் மூடப்படும். இந்த 60 கி.மீ தூர இடைவெளிக்கு மத்தியில் ஒரே ஒரு சுங்கச்சாவடி மட்டுமே இருக்கும்’ என்று தெரிவித்தார்.

Leave your comments here...