நோக்கியா மூடப்பட்ட இடத்தில் ‘2020’ முதல் சால்காம்ப் என்னும் புதிய நிறுவனம் செயல்படும்- மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

சமூக நலன்

நோக்கியா மூடப்பட்ட இடத்தில் ‘2020’ முதல் சால்காம்ப் என்னும் புதிய நிறுவனம் செயல்படும்- மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

நோக்கியா மூடப்பட்ட இடத்தில் ‘2020’ முதல் சால்காம்ப் என்னும் புதிய நிறுவனம் செயல்படும்- மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

பின்லாந்தைச் சேர்ந்த நோக்கியா நிறுவனம் கடந்த 2006ஆம் ஆண்டில் ஸ்ரீபெரும்புதூரில் செல்போன் தயாரிப்பை தொடங்கியது. இதனிடையே கடந்த 2013ம் ஆண்டு வரி ஏய்ப்பு பிரச்னையில் நோக்கியா நிறுவனம் சிக்கியது. இதனால் அந்நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 5,600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விருப்ப ஓய்வு என்கிற பெயரில் விடுவிக்கப்பட்டுவிட்டனர். வரி ஏய்ப்பு செய்த குற்றத்துக்காக நோக்கியா நிறுவனத்தின் சொத்துகள் முடக்கப்பட்டிருந்த‌ நிலையில் வரி ஏய்ப்பு தொகையை செலுத்த முடியாமல் நோக்கியா நிறுவனம் திணறி வந்தது. இதனையடுத்து நோக்கியா நிறுவனம் மூடப்பட்டது. அதில் பணியாற்றிய ஏராளமான தொழிலாளர்கள் வேலையிழந்தனர்.

இந்நிலையில் சென்னை ஸ்ரீபெரும்புதூரில் நோக்கியா நிறுவன இடத்தில், செல்போன் உதிரி பாகம் தயாரிக்கும் புதிய நிறுவனம் தொடங்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். சால்காம்ப் என்ற அந்த நிறுவனம், 2 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலையை துவக்க இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உலகின் மிக பெரிய சேல்போன் தயாரிப்பு நிறுவனமும், ஆப்பிள் நிறுவனத்தில் செல்போன் சர்ஜர் தயாரிக்கும் நிறுவனமுமான சால்காம்ப் என்ற நிறுவனம், இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம், 10 ஆயிரம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. நோக்கியா நிறுவனம் மூடப்பட்ட இடத்தில் மற்றொரு செல்போன் உதிரிபாகம் நிறுவனம் உதயமாவதற்கு மாநில அரசின் அனுமதிக்கு காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave your comments here...