‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைபடத்தை பாராட்டிய பிரதமர் மோடி..!

இந்தியா

‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைபடத்தை பாராட்டிய பிரதமர் மோடி..!

‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைபடத்தை பாராட்டிய பிரதமர் மோடி..!

தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் அதுபோன்ற படங்கள் அடிக்கடி வெளிவர வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

1990-களில் காஷ்மீரில் வெளியேற்றப்பட்ட இந்துக்கள் குறித்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தி காஷ்மீர் ஃபைல்ஸ் (The kashmir files) திரைப்படம் நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் அப்படத்திற்கு வரி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், இஸ்லாமியர்களுக்கு எதிரான திரைப்படம் என்ற தோற்றத்தையும் இப்படம் உருவாக்கியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

80களின் பிற்பகுதியிலும் 90களின் முற்பகுதியிலும் காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரிலிருந்து காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட பின்னணியை கதை களமாக கொண்டு இந்தியில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் காஷ்மீர் ஃபைல்ஸ். விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அனுபம் கேர், மிதுன் சக்ரவர்த்தி நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இப்படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.மேலும் மத்திய பிரதேச மாநில அரசு இந்த படத்திற்கு 100 சதவீத வரி விலக்கு அளித்ததோடு அரசியல் தலைவர்கள் திரை பிரபலங்கள் என பலரும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர்.


5 மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்காக பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோருக்கு பாராட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவில் காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை பாராட்டிய பிரதமர் மோடி, இதுபோன்ற படங்கள் அடிக்கடி வெளிவர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.

மேலும் பிரதமர் மோடி தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் குறித்து பேசுகையில், ‘‘காஷ்மீரில் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்ட இந்து பண்டிட்களின் சோகக் கதையை ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் பதிவு செய்துள்ளது. நீண்டகாலமாக மறைக்கப்பட்ட உண்மை இப்போது வெளிவருகிறது. கருத்துரிமைக்காக எப்போதும் கொடி பிடிப்பவர்கள் இந்தப் படத்தால் பதற்றத்தில் உள்ளனர். உண்மைகளை பரிசீலிக்காமல் இந்தப் படத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றனர். உண்மைகளை மறைக்க முயன்றவர்கள் இப்போது இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ போன்ற உண்மையை வெளிப்படுத்தும் படங்கள் அதிகமாக தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட வேண்டும்’’ என்றார்.

Leave your comments here...