கோவை சர்வதேச விமானநிலையத்தில் ஓடுதள பாதை சீரமைப்பு – ஏப்ரல் முதல் இரவு சேவை நிறுத்தம்!

தமிழகம்

கோவை சர்வதேச விமானநிலையத்தில் ஓடுதள பாதை சீரமைப்பு – ஏப்ரல் முதல் இரவு சேவை நிறுத்தம்!

கோவை சர்வதேச விமானநிலையத்தில் ஓடுதள பாதை சீரமைப்பு – ஏப்ரல் முதல் இரவு சேவை நிறுத்தம்!

கோவை சர்வதேச விமானநிலையத்தில் தற்போது ஓடுதள பாதை, 9,500 அடி நீளமும், 148 அடி அகலமும் கொண்டதாகும். ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒருமுறையும் ஓடுதள பாதை சீரமைப்புபணி மேற்கொள்ளப்படும்.இதன்படி கோவை விமானநிலைய ஓடுதள பாதை நடப்பாண்டு சீரமைக்கப்பட உள்ளது. இதற்காக, 46.32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சீரமைப்பு பணிகாரணமாக ஏப்ரல் மாதம் முதல் கோவை விமானநிலையத்தில் இரவு நேர விமான சேவை நிறுத்தப்பட உள்ளது. இது குறித்து விமானநிலைய அதிகாரிகள் கூறுகையில், ‘ஓடுதள பாதை சீரமைப்பு பணிகள் ஏப்ரல் மாதம் முதல் துவங்கப்படுகிறது. விமான இயக்கம் இல்லாத நேரத்தில் இந்த பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் விமான சேவை மற்றும் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இந்த சீரமைப்புபணி காரணமாக ஏப்ரல் மாதம் முதல் இரவு, 10.00 மணி முதல் அதிகாலை, 4.00 மணி வரை எவ்வித விமான சேவையும் இருக்காது. பொதுவாக கோவையில் குறிப்பிட்ட நேரத்தில் பெரிய அளவில் விமான சேவை இல்லாத காரணத்தால் குறிப்பிட்ட நேரத்தில் ஓடுதள பாதை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளோம்’ என்றனர்.

கோவை-சிங்கப்பூர் இடையே வரும், 27ம் தேதி முதல் தினசரி விமான சேவை துவங்கப்பட உள்ளது. கோவை சர்வதேச விமானநிலையத்தில் இருந்து கொரோனா பரவல் காரணமாக, 2020ம் ஆண்டு துவக்கம் முதல் வெளிநாடுகளுக்கு விமான சேவை நிறுத்தப்பட்டது. கொரோனா பரவல் குறைந்ததும் கோவை-சார்ஜா விமான சேவை துவங்கியது.

கடந்த ஜன., முதல் கோவை-சிங்கப்பூர் விமான சேவை துவங்கியது.இச்சேவையை ‘பிளை ஸ்கூட்’ நிறுவனம் புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு தினத்தில் மட்டும் வழங்கி வந்தது. இந்நிலையில் வரும், 27ம் தேதி முதல் கோவை-சிங்கப்பூர் இடையே தினசரி விமான சேவை துவங்க உள்ளது. இது குறித்து விமானநிலைய அதிகாரிகள் கூறுகையில், ‘கோவை-சிங்கப்பூர் இடையே வரும், 27ம் தேதிமுதல் வாரம் ஏழு நாட்களும் விமான சேவை வழங்கப்படும். ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து கோவை-இலங்கை விமான சேவை மீண்டும் துவங்க உள்ளது’ என்றனர்

Leave your comments here...