தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வு : இன்று முதல் அமல் – மதுப்பிரியர்கள் அதிர்ச்சி.!

தமிழகம்

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வு : இன்று முதல் அமல் – மதுப்பிரியர்கள் அதிர்ச்சி.!

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வு : இன்று முதல் அமல் – மதுப்பிரியர்கள் அதிர்ச்சி.!

டாஸ்மாக்கில் விற்கப்படும் மதுபானங்களின் விலையை தமிழக அரசு அதிரடியாக உயர்த்துள்ளது. அதன்படி மதுபானங்களின் விலை ரூ.10 முதல் ரூ.80 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) மூலம் மதுபானங்கள் சில்லறையாகவும் மொத்தமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பொதுவாக பகல் 12 மணி முதல் இரவு 10 மணிவரை டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நடைபெறுகிறது. கொரோனா பரவல் காரணமாக காலை 10 மணி முதல் இரவு 8மணி வரை மது விற்பனை செய்யப்பட்டது. தற்போது மீண்டும் பழைய நேரப்படி விற்பனை நடைபெறுகிறது.

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இது தொடர்பாக கடந்த 5ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கேபினட் அமைச்சரவை கூட்டத்தில் மதுவிலக்கு ஆயதீர்வை வரி மற்றும் விற்பனை வரியை உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதையடுத்து இன்று முதல் (7/3/2022) டாஸ்மாக் மதுபானங்களுக்கு குவாட்டர் ஒன்றுக்கு சாதாரண ரகங்களுக்கு ரூ.10, மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு ரூ.20, ஆஃப் பாட்டிலுக்கு சாதாரண ரகங்களுக்கு ரூ.20, மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு ரூ.40, புல் பாட்டிலுக்கு சாதாரண ரகங்களுக்கு ரூ.40, மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு ரூ.80 வரையும் விலை உயர்த்தபட்டுள்ளது. பீர் வகைகளுக்கு ரூ.10 விலை உயர்ந்தபட்டுள்ளது.

இதன் மூலம் அரசுக்கு ஒரு நாளைக்கு மதுவகைகள் மூலம் ரூ 10.35கோடி கூடுதல் வருவாய் வர வாய்ப்புள்ளது.பீர் வகைகள் மூலம் ஒரு நாளைக்கு 1.76 கோடி கூடுதல் வருவாய் வர வாய்ப்புள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 4396 கோடி கூடுதல் வருவாய் வர வாய்ப்புள்ளது என்று தெரியவருகிறது.

புதிய விலைப்பட்டியலை இன்று காலை 8 மணி அளவில் மேற்பார்வையாளர்கள் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளவும். நேற்றைய 6 3 2022 தேதியின் இருப்பு பட்டியலை பிராண்ட் வாரியாக பேக் வாரியாக அலுவலகத்தில் இன்று மதியத்திற்குள் ஒப்படைக்கவேண்டும். இன்று காலை 12 மணியளவில் கடை திறந்தவுடன் புதிய விலை பட்டியல் படி விற்பனை செய்ய வேண்டும் என்று டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave your comments here...