முருகப்பெருமான் குறித்து அவதூறு பேச்சு – சினிமா தயாரிப்பாளர் கே.ராஜன் மீது குவியும் கண்டனங்கள்!!

தமிழகம்

முருகப்பெருமான் குறித்து அவதூறு பேச்சு – சினிமா தயாரிப்பாளர் கே.ராஜன் மீது குவியும் கண்டனங்கள்!!

முருகப்பெருமான் குறித்து அவதூறு பேச்சு – சினிமா தயாரிப்பாளர் கே.ராஜன்  மீது குவியும் கண்டனங்கள்!!

சென்னையில் நடைபெற்ற ‛முகமறியான்’ என்னும் திரைப்பட இசை வெளியீட்டு விழாகவில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த கே.ராஜன் பேசுகையில், கடவுள் முருகனை கிண்டல் செய்யும் விதமாக கொச்சையாக பேசியுள்ளார். இது ஹிந்துக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

விழாவில் அவர் பேசியதாவது: அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.. தாயையும் தந்தையையும் வணங்குபவன் வேற கடவுளயுமே நீ வணங்க வேணாம். வணங்காதே.. கடவுள் இல்லை. அம்மா, அப்பாவ தவிர வேற யாருமில்ல. சரி, அந்த கடவுள வச்சு ஒரு புத்தி சொன்னானே. கடவுளையே வச்சு புராணத்துல புத்தி சொன்னானே.. ஒரு நாரதர் வந்து மாம்பழம் கொடுக்குறாரு பார்வதி, சிவன் கிட்ட. ஒரு பழம் கொடுத்துட்டு அவன் போயிட்டான். அந்த மாதிரி ஆள்காட்டி இங்க நிறைய இருக்காங்க சினிமால.. குடும்பத்த ரெண்டா ஆக்கிருவாங்க.

அது மாதிரி நாரதர் கொடுத்துட்டு போயிட்டான். இப்போ அந்த பழம் யாருக்குனு போட்டி. ‛உலகத்தை யார் சுற்றி வருகிறார்களோ அவர்களுக்கு தான் இந்த மாம்பழம் ஞானப்பழம்’னு சொல்லிட்டான். அப்போ முருகன் மயில் ஒன்ன எடுத்துட்டு உலகம் பூரா சுத்தி வர்றான். ஆனா விநாயகர் என்ன பண்ணான், அப்பா அம்மாவ சுத்தி வந்தான். கடவுள் அப்பா, அம்மா தான் என்பதை விநாயகர் மூலமாக சொல்கிற புராணம் அது. வேற ஒன்னுமில்ல அதுல. எவ்வளவும் படிக்க வேண்டாம், அந்த ஒன்ன படிங்க.

விநாயகரே சொல்லிட்டாரு தெய்வம். அப்பா, அம்மா தான் இந்த உலகம். அது தெரியாத தறுதல தான், ஒரு மயில தூக்கிட்டு ஊரெல்லாம் சுத்தி கோவிச்சுகிட்டு பழனில போய் உட்காந்துட்டு இன்னிக்கு வரையும் இறங்க மாட்டீங்குது. ஆனா அது என்னனா.. திருத்தணில ஒன்னு இருக்குனுறான்.. அங்கெங்க ஒரு ஆறு இடம் சொல்றாங்க, அறுபடை வீடுன்றாங்க. அது இருந்துட்டு போகட்டும். அவன் அந்த கோவணத்துக்கு மேல ஒரு வேட்டி கட்டட்டும் அதான் என்னுடைய எண்ணம், அந்த பழனி முருகன். இவ்வாறு தயாரிப்பாளர் ராஜன் பேசியுள்ளார். இதற்கு மேடையில் இருப்பவர்களும் சிரிக்கின்றனர்.

இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக மிகவும் கொச்சையாக பேசிய ராஜனும் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார், ‛இப்படி எல்லாம் பேசுவதற்கு துணிச்சல் அற்ற கோழை கே.ராஜன் இந்து மத கடவுளை, தமிழர்களின் தனிப்பெரும் கடவுளை மட்டும் விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது. முருகப்பெருமான் குறித்து அவதூறாக பேசிய திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் மீது தமிழக அரசு வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என கோரியுள்ளார்.

Leave your comments here...