சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு – ஆஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு

விளையாட்டு

சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு – ஆஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு

சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு – ஆஸ்திரேலிய பிரதமர்  அறிவிப்பு

ஆஸ்திரேலியாவை சேர்ந்த சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே நேற்று திடீரென மரணம் அடைந்தார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரரான ஷேன் வார்னே ஓய்வுக்கு பிறகு வர்ணனையாளராக பணியாற்றியதுடன், சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது கருத்துகளை பதிவிட்டு வந்தார்.

டெஸ்ட் போட்டிகளில், 1992ஆம் ஆண்டு ஷேன் வார்னே அறிமுகமானார். இவர், 145 போட்டிகளில் விளையாடி 708 விக்கெட்டுகள், 194 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 293 விக்கெட்டுகள் என மொத்தம் 1001 சர்வேதச விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

இவர், 1993ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரின்போது இங்கிலாந்து பேட்ஸ்மேன் மைக் கேட்டிங்கிற்கு வீசிய பந்து, ‘நூற்றாண்டின் பந்து’ (Ball of the Century) என அழைக்கப்படுகிறது. அந்த பந்து லெக்-திசையில் ஐந்து (அ) ஆறாம் ஸ்டெம்ப் லெந்தில் இருந்து ஆஃப்-திசையின் முதல் ஸ்டெம்பை தாக்கியது. பந்தின் சுழலைக் கண்டு அதிர்ச்சியடைந்த மைக் கேட்டிங், அதே அதிர்ச்சியில் பெவிலியன் வரை சென்றது இன்றும் கிரிக்கெட் ரசிகரின் மனதில் இருந்து விலகாது.ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைத் தலைமை தாங்கிய வார்னே, ஐபிஎல்லின் முதல் கோப்பையைக் கைப்பற்றிய பெருமையையும் பெற்றார்.

52 வயது சுழற்பந்து வீச்சு ஜாம்பவானான ஷேன் வார்னே தாய்லாந்தில் உள்ள தனது சொகுசு பங்களாவில் நேற்று பிணமாக கிடந்தார். அசைவின்றி கிடந்த அவருடைய இதயத்தை மீண்டும் துடிக்க வைக்க டாக்டர்கள் எடுத்த முயற்சிக்கு பலன் எதுவும் கிடைக்கவில்லை. திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் இறந்ததாக தெரிகிறது.வார்னேவின் மரணத்தை அவரது தனிப்பட்ட விஷயங்களை நிர்வகித்து வரும் நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஆனால் அவரது சாவுக்கான காரணம் என்ன? என்பது தெரிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், ஷேன் வார்னேவுக்கு இரங்கல் தெரிவித்த அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன், ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த மனிதர்களில் வார்னேவும் ஒருவர் என்று புகழாரம் சூட்டினார். அவருடைய இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.அவருக்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave your comments here...