கிம்பளம் வாங்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய கிராம நிர்வாக அதிகாரி..!

சமூக நலன்

கிம்பளம் வாங்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய கிராம நிர்வாக அதிகாரி..!

கிம்பளம் வாங்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய கிராம நிர்வாக அதிகாரி..!

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த செய்யூர் தாலுக்காவிலுள்ள செங்காட்டூர் கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக காளி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இதே ஊரைச் சேர்ந்த ராஜகோபால் என்பவர், தனது ஒரு ஏக்கர் விவசாய நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்ய கிராம நிர்வாக அதிகாரியை நாடியுள்ளார். அவருடைய நிலத்தை தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய ராஜகோபாலிடம் ரூபாய் 9 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார் காளி.

இதற்காக ரூபாய் 8000 பணத்தை இன்று செய்யூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து கிராம நிர்வாக அதிகாரி காளியிடம் ராஜகோபால் கொடுத்துள்ளார். அப்போது ராஜகோபால் முன்பே அளித்த தகவலின்பேரில் அங்கு, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை காவல் கண்காணிப்பாளர் சிவபாதசேகரன் மற்றும் போலீசார், வி.ஏ.ஓ., காளியை, கையும் களவுமாக பிடித்து, கைது செய்தனர். அவரிடமிருந்து லஞ்ச பணம் 8 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேற்கொண்டு காளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Leave your comments here...