யூடியூப் படைப்பாளிகளால் இந்தியாவுக்கு ரூ.6,800 கோடி வருமானம்- ஆய்வில் தகவல்..!

இந்தியா

யூடியூப் படைப்பாளிகளால் இந்தியாவுக்கு ரூ.6,800 கோடி வருமானம்- ஆய்வில் தகவல்..!

யூடியூப் படைப்பாளிகளால் இந்தியாவுக்கு ரூ.6,800 கோடி வருமானம்- ஆய்வில் தகவல்..!

யூடியூப்பில் வீடியோ வெளியிட்டு பணம் சம்பாதிக்கும் படைப்பாளிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். தனிப்பட்ட வீடியோ படைப்பாளிகளில் இருந்து பெரும் நிறுவனங்கள் வரை யூடியூப் மூலம் பயனடைகின்றன.

யூடியூப் வீடியோக்கள் தயாரிப்பு மூலம் வேலைவாய்ப்புகளும் தோன்றியுள்ளன. இந்நிலையில் யூடியூப் படைப்பாளிகள் சூழலமைப்பு இந்திய பொருளாதாரத்திற்கு பலன் அளித்து வருவதாகவும், கடந்த 2020-ம் ஆண்டில் மட்டும் சுமார் ரூ.6,800 கோடி பங்களிப்பு யூடியூப் படைப்பாளிகள் மூலம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆக்ஸ்போர்ட் எகானாமிக்ஸ் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- யூடியூப் மூலம் இந்தியாவில் பொருளாதார, சமூக, கலாசார தாக்கங்கள் அதிகரித்துள்ளன. கடந்த 2020-ம் ஆண்டில் யூடியூப் படைப்பாளிகள் சூழலமைப்பு மூலம் மட்டும் இந்திய ஜிடிபிக்கு ரூ.6,800 கோடி பங்களிப்பு கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் 6 லட்சத்து 83 ஆயிரத்து 900 முழு நேர வேலைவாய்ப்புகளும் உருவாகியுள்ளன. யூடியூப் விளம்பரங்களால் வரும் வருமானம், சந்தா, ஸ்பான்ஷர்ஷிப் உள்ளிட்ட வழிகளில் மூலம் கிடைக்கும் வருமானமும் இதில் கணக்கிடப்பட்டுள்ளன.

மேலும் யூடியூப் வீடியோக்களை உருவாக்கும் படைப்பாளிகள் மற்றும் குழுக்கள், அவர்களால் உருவாகும் வேலைவாய்ப்புகள் உள்ளிட்டவையும் இதில் ஆராயப்பட்டுள்ளன. யூடியூப்பில் கிடைக்கும் வருமானம் மட்டுமின்றி படைப்பாளிகளுக்கு உலக அளவில் ரசிகர்கள், பிராண்ட் பார்ட்னர்ஷிப்கள், நேரலை நிகழ்ச்சிகள் மூலமும் வருமானம் கிடைக்கின்றன. இந்த வருமானங்களால் படைப்பாளிகள் மட்டும் பயனடையவில்லை, அவர்களை சார்ந்திருக்கும் பிற துறைகளும் பயனடைகின்றன. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசு கடந்த ஆண்டு வெளியிட்ட கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 44.8 கோடி யூடியூப் பயனர்கள், 53 கோடி வாட்ஸ் அப் பயனர்கள், 41 கோடி ஃபேஸ்புக் பயனர்கள், 21 கோடி இன்ஸ்டாகிராம் பயனர்கள் உள்ளனர்.

Leave your comments here...