கால்நடை தீவன ஊழல் – லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!

இந்தியா

கால்நடை தீவன ஊழல் – லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!

கால்நடை தீவன ஊழல் – லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!

கால்நடை தீவன ஊழல் தொடர்பான 5வது வழக்கில், பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ், 1991 – 1996 ஆம் ஆண்டு வரை பீகார் மாநில முதலமைச்சராக பதவி வகித்தார். அப்போது, கால்நடைகளுக்கு தீவனம் வாங்கிய விவகாரத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ விசாரித்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. கால்நடை தீவன ஊழல் தொடர்பாக, லாலு பிரசாத் யாதவுக்கு எதிராக ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2013, 2017, 2,018 ஆண்டுகளில் 4 வழக்குகளில் சிறைத் தண்டை பெற்ற லாலு பிரசாத் யாதவ், தற்போது அவர் ஜாமினில் வெளியே உள்ளார்.

இந்நிலையில், கால்நடை தீவன ஊழல் தொடர்பான 5வது வழக்கு விசாரணை, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அப்போது, கால்நடைத் துறைக்கு அரசு கஜானாவில் இருந்து பணத்தை (ரூ. 139. 35 கோடி) முறைகேடாக எடுத்த வழக்கில், லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை, ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.சசி அளித்தார். தீர்ப்பு அளிக்கப்பட்ட போது, லாலு பிரசாத் யாதவ் உட்பட குற்றம் சாட்டப்பட்ட 98 பேர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இதில், 24 பேர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும், முன்னாள் எம்.பி. ஜக்தீஷ் சர்மா உட்பட 35 பேருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது. லாலு பிரசாத் யாதவ் மற்றும் 39 பேருக்கான தண்டனை விவரங்கள், வரும் 21 ஆம் தேதி அறிவிக்கப்படும் என, நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. இந்த வழக்கில், லாலு பிரசாத் யாதவுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க நேரிட்டால் அவர் மீண்டும் சிறைக்கு செல்ல நேரிடும் என கூறப்படுகிறது.

Leave your comments here...