வாகன சோதனையில் 3 லட்சம் ரூபாய் சிக்கியது..!

அரசியல்தமிழகம்

வாகன சோதனையில் 3 லட்சம் ரூபாய் சிக்கியது..!

வாகன சோதனையில் 3 லட்சம் ரூபாய் சிக்கியது..!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதிகளில், தேர்தல் பறக்கும் படை அதிகாரி விஜிமாரி தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

காரனேசன் காலனி பேருந்து நிறுத்தம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ஞானகிரி சாலையைச் சேர்ந்த செல்வராஜன் என்பவர் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அவரிடம் எந்தவிதமான ஆவணங்களும் இல்லாமல் இருந்த 1 லட்சத்து, 57 ஆயிரம் ரூபாய் பணத்தை அதிகாரிகள் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.

மேலும் சிவகாசி – சங்கரன்கோவில் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, செவல்பட்டி பகுதியைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் என்பவர் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அவரிடம் எந்தவிதமான ஆவணங்களும் இல்லாமல் இருந்த 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுசென்ற 3 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் பணத்தை, சிவகாசி மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் பறக்கும்படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

Leave your comments here...