தமிழ் பெண்ணை மணக்கிறார் கிளென் மேக்ஸ்வெல் – வைரலாகும் திருமண பத்திரிக்கை..!

உலகம்விளையாட்டு

தமிழ் பெண்ணை மணக்கிறார் கிளென் மேக்ஸ்வெல் – வைரலாகும் திருமண பத்திரிக்கை..!

தமிழ் பெண்ணை மணக்கிறார் கிளென் மேக்ஸ்வெல் – வைரலாகும் திருமண பத்திரிக்கை..!

ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் தமிழ் பெண்ணான வினி ராமனை வரும் மார்ச் மாதம் 27ஆம் தேதி மணக்கிறார்.

கிளென் மேக்ஸ்வெல்லின் திருமண பத்திரிகை, தமிழ் மொழியில் இருப்பது பற்றி, இணையத்தில் அதிகம் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலியா பெண் வினி ராமன். இவர் மெல்போர்ன் பகுதியில், பல் மருத்துவராக பணியாற்றி வருகிறார். வினி ராமன் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே ஆஸ்திரேலியாவில் தான்.

இந்நிலையில், மேக்ஸ்வெல்லும், வினி ராமனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு, இருவரும் நிச்சயதார்த்தமும் செய்து கொண்டனர். அது மட்டுமில்லாமல், இந்த நிச்சயதார்த்தம், இந்திய முறைப் படியும் நடைபெற்றிருந்தது. இது தொடர்பான புகைப்படங்கள், அதிகம் வைரலாகி இருந்தது. அதே போல, மேக்ஸ்வெல் – வினி ராமன் காதல் ஜோடி, ஒன்றாக ஊர் சுற்றும் புகைப்படங்களும் அதிகம் இணையத்தில் லைக்குகளை அல்லி வந்தது.

தொடர்ந்து, இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்திருந்த நிலையில், கொரோனா தொற்றின் காரணமாக, திருமணம் தள்ளிப் போனதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தான், மேக்ஸ்வெல் – வினி ராமன் திருமணம், வரும் மார்ச் மாதம் 23 ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

அது மட்டுமில்லாமல், இவர்களின் திருமண அழைப்பிதழ், தமிழில் அச்சடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரின் திருமணம் பத்திரிக்கை, தமிழில் இருக்கும் நிலையில், இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.அதே போல, மேக்ஸ்வெல் – வினி ராமன் ஜோடிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Leave your comments here...