கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமரின் புகைப்படம் : சகிப்பு தன்மையற்றவர்களாக இருக்க கூடாது: கேரள உயர் நீதிமன்றம்..!

இந்தியா

கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமரின் புகைப்படம் : சகிப்பு தன்மையற்றவர்களாக இருக்க கூடாது: கேரள உயர் நீதிமன்றம்..!

கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமரின் புகைப்படம் : சகிப்பு தன்மையற்றவர்களாக இருக்க கூடாது: கேரள உயர் நீதிமன்றம்..!

கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமரின் புகைப்படம் இருப்பதை தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு சகிப்புத்தன்மை அற்றவர்களாக குடிமக்கள் இருக்க கூடாது’ என, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. ‘கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமரின் புகைப்படம் இருப்பது குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல்; அதை அகற்ற வேண்டும்’ என, பீட்டர் மையாலிபரம்பில் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘இந்த மனு அரசியல் உள்நோக்கம் உடையது; அற்பமானது. விளம்பர நோக்கத்திற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், மனுதாரருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது.உரிமை மீறல் இல்லைஇந்த உத்தரவை எதிர்த்து இரண்டு நீதிபதிகள் உடைய அமர்வில், பீட்டர் மையாலிபரம்பில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு, கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.மணிகுமார், நீதிபதி ஷாஜி பி.சாலி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமரின் புகைப்படம் இடம்பெற்றிருப்பது வாக்காளர்களை கவரும் நோக்கத்திற்காக தான் என, மனுதாரர் தரப்பு வாதத்தை ஏற்க முடியாது. தடுப்பூசி சான்றிதழை தனிநபர்கள் பதிவிறக்கம் செய்து, தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர். இதனால் பெரிய விளம்பரம் கிடைத்து விடாது. பிரதமரின் புகைப்படமும், அதில் உள்ள வாசகங்களும் மக்களை கவர்வதற்காகவும், தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஊக்கப்படுத்தவுமே இடம்பெற்றுள்ளது.

இதில் அடிப்படை உரிமை மீறல் இல்லை.மேல்முறையீட்டு மனுஅரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள உரிமைகளை இவ்வளவு எளிதாக கருத முடியாது. ஒரு சான்றிதழில் பிரதமரின் புகைப்படம் இடம் பெறுவதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு சகிப்புத்தன்மை அற்றவர்களாக குடிமக்கள் இருக்க கூடாது.எனவே இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தை கருத்தில் வைத்து, மனுதாரருக்கு விதிக்கப்பட்ட 1 லட்சம் ரூபாய் அபராதம் 25 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave your comments here...