தமிழகத்தின் 25 ரயில்வே திட்டங்களுக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு..!

தமிழகம்

தமிழகத்தின் 25 ரயில்வே திட்டங்களுக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு..!

தமிழகத்தின் 25 ரயில்வே திட்டங்களுக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு..!

தமிழகத்தில் 25 ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற மத்திய பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 3,077 கிலோ மீட்டர் தூரத்திலான ரயில் பாதை திட்டங்களை செயல்படுத்த முடியும் எனவும் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட்டில் தெற்கு ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து தெற்கு ரயில்வே பொறுப்பு பொதுமேலாளர் ஏ.கே.அகர்வால் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், தெற்கு ரயில்வே பணிகளுக்கு இந்த பட்ஜெட்டில் 2,374 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இது கடந்த மூன்று ஆண்டுகளை விட 89 சதவிகிதம் அதிகம் என்றும் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் நடைபெற்று வரும் 25 ரயில்வே திட்டங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 3 ஆயிரத்து 77 கிலோ மீட்டர் தொலைவிலான ரயில் பாதை திட்டங்களை செயல்படுத்த முடியும் என்றும் கூறினார்.

Leave your comments here...