பிறப்பு சான்று அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தலாம்: பள்ளிகளுக்கு கல்வி ஆணையர் உத்தரவு

தமிழகம்

பிறப்பு சான்று அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தலாம்: பள்ளிகளுக்கு கல்வி ஆணையர் உத்தரவு

பிறப்பு சான்று அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தலாம்: பள்ளிகளுக்கு கல்வி ஆணையர் உத்தரவு

Mhr>பிறப்பு சான்று அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் ஆணையர் அனுப்பியுள்ள கடிதம்: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றுகளில் திருத்தம் கோரி அதிக அளவில் விண்ணப்பங்கள் தேர்வுத்துறைக்கு வருகின்றன. பிழையில்லா மதிப்பெண் சான்றுகளை அச்சிட்டு வழங்க வசதியாக பள்ளிகளில் பின் வரும் முறைகளை பின்பற்ற வேண்டும்.

* அடுத்த கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கப்படும்போது பிறப்பு சான்றின் அடிப்படையில் மாணவர்களின் பெயர், தாய், தந்தையர் பெயர்(தமிழ் மற்றும் ஆங்கிலம்) பிறந்த தேதி, ஆகியவற்றை சேர்க்கைப் பதிவேட்டில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.

* பத்தாம் வகுப்பு மற்றும் மேனிலைப் பள்ளி பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணவர்கள் பெயர் பட்டியலின் அடிப்படையிலேயே மதிப்பெண் சான்றுகள் அச்சிட்டு வழங்கப்படுகின்றன.

பெயர்ப் பட்டியல் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணைய தளத்தில் உள்ள விவரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்படுவதால் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெயர், தாய், தந்தை,அல்லது பாதுகாவலர் பெயர்(தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்) மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை இஎம்ஐஎஸ் ல் பதிவேற்றம் செய்யும்போது எந்த தவறும் இல்லாமல் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

Leave your comments here...