நள்ளிரவில் திமுக வட்டச் செயலாளர் வெட்டி கொலை..!

அரசியல்

நள்ளிரவில் திமுக வட்டச் செயலாளர் வெட்டி கொலை..!

நள்ளிரவில் திமுக வட்டச் செயலாளர் வெட்டி கொலை..!

சென்னையில் நேற்றிரவு மடிப்பாக்கம் பகுதியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சீட் ஒதுக்கீடு விவகாரத்தில், திமுக நிர்வாகி ஆறு பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மடிப்பாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் செல்வம். (38) இவர், நேற்றிரவு ராஜாஜி நகர் பிரதான சாலையில் தனது ஆதரவாளர்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் அவரை வெட்டிவிட்டு இரு சக்கர வாகனங்களில் தப்பிச் சென்றது. உடன் இருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலை அறிந்த மடிப்பாக்கம் காவல் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்வம் கொல்லப்பட்டதால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக மடிப்பாக்கம் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

188 வது வார்டு திமுக வட்டச் செயலாளரான செல்வம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனது மனைவியை போட்டியிட வைப்பதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்துவந்த நிலையில் கொல்லப்பட்டிருக்கிறார். மறுபுறம் ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட போட்டி காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்றும் காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave your comments here...