2022-23ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்..!

இந்தியா

2022-23ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்..!

2022-23ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்..!

கடந்த காலங்களில் பிப்ரவரி இறுதியில் தாக்கல் செய்யப்பட்டு வந்த மத்திய நிதிநிலை அறிக்கை, பிப்ரவரி ஒன்றாம் தேதிக்கு மாற்றப்பட்டது.

அதன்படி, 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காலை 11 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்கிறார். தொடர்ந்து நான்காவது முறையாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன், கொரோனா காரணமாக 2-வது முறையாக காதிதம் இல்லாத மின்னணு முறையில் பட்ஜெட் தாக்கல் செய்யவிருக்கிறார்.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மத்திய நிதிநிலை அறிக்கை பல்வேறு எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக தனிநபர் வருமான வரி தொடர்பாக அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டரை லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளோருக்கு அளிக்கப்பட்டு வரும் வருமான வரி விலக்கு 3 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படும் எனத் தெரிகிறது.

இதேபோல மூத்த குடிமக்களுக்கான உச்சவரம்பு 3 லட்சம் ரூபாயிலிருந்து மூன்றரை லட்சமாக அதிகரிக்கப்படும் என கூறப்படுகிறது. இவைதவிர கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சிறுகுறு தொழில் நிறுவனங்களை ஊக்கப்படுத்துவதற்கான அறிவிப்புகளும் இருக்கும் எனத் தெரிகிறது. மேலும் கிரிப்டோ கரன்சிகள் மீதான முதலீடு மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கும் வரி விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Leave your comments here...