அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி..!

உள்ளூர் செய்திகள்சமூக நலன்

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி..!

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி..!

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஸ்பர்ஷ் தேசிய தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி நடைபெற்றது. ஆண்டுதோறும் மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெறும் இவ் உறுதிமொழி நிகழ்வினை வட்டார மருத்துவ அலுவலர் பாண்டியராஜன் தலைமை வகித்தார்.

சுகாதார மேற்பார்வையாளர் ராஜதுரை பாண்டியன், தலைமை கண்காணிப்பாளர், இளங்கோவன் ஆகியோர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் மருத்துவ அலுவலர்கள் உமா ,புனிதா, ஜெயமுருகன், சுகாதார ஆய்வாளர் சோலைமலை செல்வன், கண் மருத்துவ உதவியாளர் ராஜ்மோகன் சுரேஷ், அருள், மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். உறுதிமொழி ஏற்பாட்டினை மருத்துவமல்லா மேற்பார்வையாளர் முத்து மாயன் ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பரிசோதனைக்கு வந்தவர்களும் உறுதிமொழிஎடுத்துக் கொண்டனர்

Leave your comments here...