திருவெற்றியூர் திமுக எம்.எல்.ஏ கே.பி சங்கர் மீது போலீசில் புகார்..!

அரசியல்தமிழகம்

திருவெற்றியூர் திமுக எம்.எல்.ஏ கே.பி சங்கர் மீது போலீசில் புகார்..!

திருவெற்றியூர் திமுக எம்.எல்.ஏ கே.பி சங்கர் மீது போலீசில் புகார்..!

சென்னையில் வடகிழக்கு பருவமழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் சென்னை திருவொற்றியூர் மண்டலத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்போது, எம்.எல்.ஏ., மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கு வந்துள்ளனர்.தார் சாலை தரம் குறித்து, கேள்வி எழுப்பியபோது, மாநகராட்சி அதிகாரிகள் – எம்.எல்.ஏ., மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில், எம்.எல்.ஏ., மற்றும் அவரது ஆதரவாளர்கள், இளநிலை பொறியாளர், ஊழியர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, சங்கரின் வகித்து வந்த திருவொற்றியூர் தி.மு.க., மேற்கு பகுதி செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, எம்.எல்.ஏ., சங்கர் மீது புகாரளித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், இளநிலை பொறியாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.

Leave your comments here...