கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை வெளி சந்தைகளில் விற்க மத்திய அரசு அனுமதி..!

இந்தியா

கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை வெளி சந்தைகளில் விற்க மத்திய அரசு அனுமதி..!

கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை வெளி சந்தைகளில் விற்க மத்திய அரசு அனுமதி..!

கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டை முறையாக சந்தையில் விற்பனை செய்வதற்கு இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு அனுமதி வழங்கியது.

நாட்டில் கொரோனா தொற்றுக்கு எதிராக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியின் முறையான சந்தை விற்பனைக்கு அனுமதி கேட்டு சீரம் நிறுவனத்தின் இயக்குனர் பிரகாஷ் குமார் சிங், கடந்த செப்டம்பர் 25ம் தேதி இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரலுக்கு விண்ணப்பித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, கூடுதல் தரவுகள் மற்றும் ஆவணங்கள் கேட்கப்பட்டதை அடுத்து நிறுவனம் சார்பில் சமீபத்தில் அவை சமர்பிக்கப்பட்டன. கடந்த 19ம் தேதி இந்திய மருந்து தர கட்டுப்பாடு அமைப்பின் நிபுணர் குழுவானது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசியை நிபந்தனைக்குட்பட்டு சந்தையில் விற்பனை செய்ய அனுமதிக்குமாறு பரிந்துரை செய்திருந்தது.

இந்நிலையில், பாரத் பயோடெக்கின் கோவாக்சின் மற்றும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிகளை முறையாக சந்தையில் விற்பனை செய்வதற்கு இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு நேற்று அனுமதி அளித்துள்ளது. புதிய மருந்து மற்றும் மருத்துவ பரிசோதனைகள் விதிகள் 2019ன் கீழ் இதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு விலை ரூ.275 அளவுக்கு குறையும். தற்போது நடந்து கொண்டிருக்கும் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் தரவுகளை சமர்பிக்க வேண்டும், நோய் தடுப்புக்கு பின் ஏற்படும் பாதகமான நிகழ்வுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று நிறுவனங்களுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...