அரியலூர் மாணவி, கட்டாய மதமாற்ற செய்ததைக் கண்டித்து இந்து முன்னணியினர் ஊர்வலம்..!

தமிழகம்

அரியலூர் மாணவி, கட்டாய மதமாற்ற செய்ததைக் கண்டித்து இந்து முன்னணியினர் ஊர்வலம்..!

அரியலூர்  மாணவி, கட்டாய மதமாற்ற செய்ததைக் கண்டித்து இந்து முன்னணியினர் ஊர்வலம்..!

அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கீழத்தெருவை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது 17 வயதான மகள், தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியில், விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார்.

அந்த மாணவி சில தினங்களுக்கு முன்னர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, பள்ளி நிர்வாகம் தரப்பில் சிலர் மாணவியை மதம் மாறக்கூறி கட்டாயப்படுத்தியதாகவும், அதன் காரணமாகவே மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும் புகார் எழுந்தது.

இது தொடர்பாக, அந்த மாணவி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து, பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவியின் உடலை வாங்க மறுத்து பெற்றோரும், பாஜகவினரும், இந்து முன்னணி தொடர் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், அரியலூர் மாவட்ட மாணவி, கட்டாய மதமாற்ற செய்ததைக் கண்டித்து, மதுரையில் இந்து முன்னணியினர் ஊர்வலம் நடத்தினர். இந்த ஊர்வலத்துக்கு, இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் மதன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அரசு பாண்டி, செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், சேகர், இந்து வழக்கறிஞர் சங்க மாவட்டத் தலைவர் அர்ச்சுணராஜ், பொது செயலாளர் சிவக்குமார், வழக்கறிஞர் சங்க மாவட்டச் செயலாளர் பார்த்தீபன், சபரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave your comments here...