டெல்லியில் பயங்கரம் – வாக்கிங் சென்ற மாணவி : புதருக்குள் இழுத்து சென்று பலாத்காரம்..!

இந்தியா

டெல்லியில் பயங்கரம் – வாக்கிங் சென்ற மாணவி : புதருக்குள் இழுத்து சென்று பலாத்காரம்..!

டெல்லியில் பயங்கரம் – வாக்கிங் சென்ற மாணவி :  புதருக்குள் இழுத்து சென்று பலாத்காரம்..!

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலை கழகத்தில் பிஎச்.டி. படித்து வரும் மாணவி ஒருவர் வளாகத்தின் கிழக்கு வாசல் பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு 11.45 மணியளவில் நடைபயிற்சி மேற்கொள்ள சென்றுள்ளார்.  திடீரென வளாகத்தின் உள்ளே இருந்து பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர் மாணவியிடம் தகாத முறையில் பேசியுள்ளார்.

இதன்பின் அந்த மாணவியை அருகேயிருந்த புதருக்குள் தரதரவென இழுத்து சென்று, அவரது ஆடைகளை களைந்துள்ளார்.  இதன்பின்பு அவரிடம் பலாத்காரத்தில் ஈடுபட்டு உள்ளார்.  இதனால் மாணவி சத்தம் போட்டு அலறியுள்ளார். 

இதனை தொடர்ந்து பயந்து போன அந்நபர் அங்கிருந்து தப்பியுள்ளார்.இரவு 12.45 மணியளவில் வந்த அவசர தொலைபேசி அழைப்பை ஏற்று டி.சி.பி. கவுரவ் சர்மா உள்ளிட்ட போலீசார் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த சம்பவத்தில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள மாணவி மறுத்து விட்டார்.  அவரின் செல்போனையும் அந்த நபர் பறித்து சென்றுள்ளார்.  அதிர்ச்சியில் இருந்து மீளாத மாணவி, அந்த நபரை சரியாக அடையாளம் காட்டுவேன் என கூறியுள்ளார்.  இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave your comments here...