பொங்கல் பரிசு தொகுப்பில் குறைவான பொருட்கள் – பொதுமக்கள் குமுறல்.!

உள்ளூர் செய்திகள்தமிழகம்

பொங்கல் பரிசு தொகுப்பில் குறைவான பொருட்கள் – பொதுமக்கள் குமுறல்.!

பொங்கல் பரிசு தொகுப்பில் குறைவான பொருட்கள் – பொதுமக்கள் குமுறல்.!

மதுரை செல்லம்பட்டி அருகே கோவிலாங்குளம் ஊராட்சிக்குட்பட்ட முண்டுவேலம்பட்டி கிராமத்தில் பொங்கல் பரிசு தொகுப்பில் குறைவான பொருட்கள் வழங்கியதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுவதுடன், விடுபட்ட பொருட்களை உடனே வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியம், கோவிலாங்குளம் ஊராட்சிக்குட்பட்ட முண்டுவேலம்பட்டி கிராமத்தில் உள்ள, ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில், குளறுபடி நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பொங்கல் தொகுப்பில் பொதுமக்களுக்கு வழங்கிய பொருட்களில் 21 பொருட்களுக்கு பதிலாக 17 பொருட்கள் மட்டும் இருப்பதாகவும் கரும்பு பருப்பு மிளகு நெய் புளி போன்ற பொருட்கள் இல்லை என்றும், இதுகுறித்து விற்பனையாளரிடம் சென்று முறையிட்டால், தரக்குறைவான வார்த்தைகளில் பொதுமக்களை கீழ்த்தரமாக பேசுவதாகவும், ஆகையால், இரண்டு நாட்களில் விடுபட்ட பொருட்களை வழங்காவிட்டால் பொது மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்த போவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், மாதந்தோறும் வழங்கும் பொருட்களில் பெரிய முறைகேடு நடப்பதாகவும் ஆகையால், விற்பனையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்கின்றனர். மேலும் ,அவர்கள் கூறுகையில்: ஜெயலலிதா அம்மா ஆட்சியில், வழங்கிய ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை 1500 கொடுப்பதாக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்து, இதுவரை அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டு
கின்றனர்.

Leave your comments here...