தைப்பூசத் திருவிழா – நெல்லையப்பர் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது..பக்தர்கள் அனுமதி இல்லை..!

ஆன்மிகம்தமிழகம்

தைப்பூசத் திருவிழா – நெல்லையப்பர் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது..பக்தர்கள் அனுமதி இல்லை..!

தைப்பூசத் திருவிழா – நெல்லையப்பர் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது..பக்தர்கள் அனுமதி இல்லை..!

திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோவிலில் இன்று(ஜன.,09) காலை தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான நெல்லுக்கு வேலியிட்ட திருவிழா வரும் 12- ம் தேதி நடைபெறுகிறது.

தென்தமிழகத்தில் பிரசித்திபெற்ற சிவாலயங்களுள் திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மாள் திருக்கோவிலும் ஒன்றாகும் . இங்கு ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு கோவில் திருநடை அதிகாலை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை, விஸ்வ ரூப பூஜை ஆகியவை நடைபெற்றது.

பின்னர் திருக்கொடி பல்லக்கில் கோவில் உள் பிரகாரத்தில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. தொடா்ந்து சுவாமி சன்னதி முன் அமைந்துள்ள தங்க கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கு மஞ்சள்பொடி மாபொடி வாசனைப்பொடி பால் தயிா் இளநீா் விபூதி சந்தனம் உள்ளிட்ட அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் மஹா தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து 12 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருநெல்வேலி என மாவட்டத்திற்கு பெயர் வர காரணமான நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் வைபவம் வரும் 12ம் தேதி சிறப்பாக நடைபெறும். கொரோனாவினால் முழு அடைப்பை ஒட்டி பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

Leave your comments here...