பஞ்சாப் தீவிரவாத நடவடிக்கைகளின் மையமாக மாறிக் கொண்டிருக்கிறது – நடிகை கங்கனா ரனவத் குற்றச்சாட்டு

இந்தியா

பஞ்சாப் தீவிரவாத நடவடிக்கைகளின் மையமாக மாறிக் கொண்டிருக்கிறது – நடிகை கங்கனா ரனவத் குற்றச்சாட்டு

பஞ்சாப் தீவிரவாத நடவடிக்கைகளின் மையமாக மாறிக் கொண்டிருக்கிறது – நடிகை கங்கனா ரனவத் குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக, நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு காரில் சென்றார். விவசாயிகள் போராட்டம் காரணமாக அவர் தனது பயணத்தை தொடர முடியாமல் டெல்லி திரும்பினார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக பிரதமர், ஜனாதிபதியை சந்தித்து பேசி உள்ளார். இந்நிலையில் இதுதொடர்பாக பாலிவுட் நடிகை கங்கனா ரனவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதியிருப்பதாவது: பஞ்சாபில் நடந்தது அவமானகரமானது. பிரதமர் என்பவர் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர். மக்களின் குரல். அவர் மீதான தாக்குதல் என்பது ஒவ்வொரு இந்தியரின் மீதான தாக்குதல். ஜனநாயகத்தின் மீதான தாக்குதலும் கூட.

பஞ்சாப் தீவிரவாத நடவடிக்கைகளின் மையமாக மாறிக் கொண்டிருக்கிறது. அவர்களை நாம் இப்போது தடுக்கவில்லை என்றால் தேசம் ஒரு மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என்று கூறியிருக்கிறார். ஏற்கனவே டெல்லியில் போராடிய பஞ்சாப் விவசாயிகளை தீவிரவாதிகளுடன் ஒப்பிட்டு கங்கனா கருத்து தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...