குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து – முப்படைகளின் விசாரணை அறிக்கை பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் தாக்கல்..!

இந்தியா

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து – முப்படைகளின் விசாரணை அறிக்கை பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் தாக்கல்..!

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து – முப்படைகளின் விசாரணை அறிக்கை பாதுகாப்புத்துறை அமைச்சரிடம்  தாக்கல்..!

ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான முப்படைகளின் விசாரணை அறிக்கை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் தாக்கல் செய்யப்பட்டது.

கோவையில் இருந்து குன்னூருக்கு கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி சென்ற Mi-17V5 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், 14 பேர் உயிரிழந்தனர். இதில் ஹெலிகாப்டர் தீயில் எரிந்ததால் அதில் பயணம் செய்த ஜெனரல் பிபின் ராவத், அவரின் மனைவி மதுலிகா ராவத், ராணுவ உயர் அதிகாரிகள் என 13 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். உயிருக்கு போராடிய அதிகாரி வருண் சிங் மீட்கப்பட்டு பெங்களூருவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவரும் ஒரு வாரத்தில் உயிரிழந்தார். 14 பேர் இறப்புக்கு காரணமான இந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரிக்க விமானப் படை அதிகாரி மானவேந்திர சிங் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது.

உலகின் மிக அதிநவீன ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதும், நாட்டின் பாதுகாப்புத் துறையின் மிகப் பெரிய அதிகாரி உயிரிழந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து முப்படைகளைச் சேர்ந்த அதிகாரிகளைக் கொண்ட குழு அமைத்து விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் அந்த அறிக்கை தயாரிப்புப் பணி நிறைவடைந்துவிட்டதாகவும் அது சட்டரீதியான தணிக்கைக்கு அனுப்பப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதில் ஹெலிகாப்டர் நல்ல நிலையில் இருந்ததாகவும் CFIT எனப்படும் தொழில்நுட்ப குறியீடே விபத்துக்கு காரணம் என குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது, அதாவது அந்த தருணத்தில் முடிவெடுப்பதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக விபத்து நிகழ்ந்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மோசமான வானிலையால் முடிவெடுப்பதில் பைலட் அல்லது அவரது குழுவினருக்கு தடுமாற்றம் ஏற்பட்டு இருக்கலாம் என்றும் அத்துறை வல்லுனர்கள் CFIT என்பதற்கு விளக்கம் அளித்துள்ளனர். ஹெலிகாப்டர் தரையிறங்க 7 நிமிடம் இருந்த நிலையில் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும், விசாரணையில் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான முப்படைகளின் விசாரணை அறிக்கை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் தாக்கல் செய்யப்பட்டது.விபத்துக்கான காரணம் தொடர்பான விசாரணை அறிக்கை விவரங்களை அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விபத்துக்கான காரணம், இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றிய பரிந்துரை ஆகியவை விசாரணை அறிக்கையில் இடம் பெற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Leave your comments here...