கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.50,000 நிவாரணம் : அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!

தமிழகம்

கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.50,000 நிவாரணம் : அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!

கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.50,000 நிவாரணம் : அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!

கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 36 ஆயிரத்து 805 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நிவாரண நிதி வழங்கும் வகையில் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 182.74 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழந்துள்ள நபர்களின் குடும்பத்தினர், கொரோனா நோய் தொற்றினால் இறந்ததற்கான இறப்பு சான்றிதழ் மூலம் நிவாரண தொகை பெற விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...