அனுமன் ஜெயந்தி விழா: 1,00,008 மாலையுடன் காட்சியளிக்கும் நாமக்கல் ஆஞ்சநேயர்..!

ஆன்மிகம்

அனுமன் ஜெயந்தி விழா: 1,00,008 மாலையுடன் காட்சியளிக்கும் நாமக்கல் ஆஞ்சநேயர்..!

அனுமன் ஜெயந்தி விழா: 1,00,008 மாலையுடன் காட்சியளிக்கும் நாமக்கல் ஆஞ்சநேயர்..!

மார்கழி மாதம் அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் கொண்ட நன்னாளில் ஆஞ்சநேயர் அவதரித்தார். அதன்படி, (இன்று 2.1.22) அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல்லில் உள்ள, பிரசித்தி பெற்ற அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவிலில், அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நாமக்கல்லில் பிரசித்தி பெற்றது ஸ்ரீ ஆஞ்சநேயர் சாமி . ஒரே கல்லால் 18 அடி உயரத்தில் ஆன ஸ்ரீநாமக்கல் ஆஞ்சநேயர் சாமி கைகூப்பி வணங்கியபடி காட்சி அளிக்கிறார். ஆண்டு தோறும் மார்கழி மாதம் அமாவாசை மூல நட்சத்திரத்தில் வரும் ஆஞ்சநேயர் பிறந்த நாளை அனுமன் ஜெயந்தி விழாவாக வெகுவிமர்சியாக கொண்டாடப்பட்டு வருகின்றன.

அதிகாலையில் கோவிலின் நடை திறக்கப்பட்டு, காலை 5 மணிக்கு 19 அடி உயர ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடைகளால் தொடுக்கப்பட்ட மாலைகள் சார்த்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இவ்விழாவில் மாநில இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், பக்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சுவாமி வழிபாடு செய்தனர்.

கொரோனா கட்டுபாடுகளோடு ஆஞ்சநேயரை தரிசிக்க இணைய வழியில் பதிவு செய்த 300 பேர், இலவச தரிசன முறையில் 200 பேர் என ஒருமணி நேரத்திற்கு 500 பேர் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், பக்தர்கள் வந்து செல்ல வசதியாக நாமக்கல் கோட்டை சாலை பகுதி மூடப்பட்டு போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இவ்விழாவில் நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், திருச்சி மற்றும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, ஆஞ்சநேயரை வழிபட்டுச் சென்றனர். .

Leave your comments here...