மீட்கப்பட்ட ரூ.500 கோடி மதிப்பிலான மரகதலிங்க சிலை – திருக்குவளை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்:- தமிழக முதல்வருக்கு தருமபுரம் ஆதீனம் வேண்டுகோள்..!

தமிழகம்

மீட்கப்பட்ட ரூ.500 கோடி மதிப்பிலான மரகதலிங்க சிலை – திருக்குவளை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்:- தமிழக முதல்வருக்கு தருமபுரம் ஆதீனம் வேண்டுகோள்..!

மீட்கப்பட்ட ரூ.500 கோடி மதிப்பிலான மரகதலிங்க சிலை – திருக்குவளை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்:- தமிழக முதல்வருக்கு தருமபுரம் ஆதீனம் வேண்டுகோள்..!

தஞ்சையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தொன்மையான மரகத லிங்க சிலையை, சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். தஞ்சையில் கைப்பற்றப்பட்ட மரகத லிங்கத்தின் புகைப்படத்தை தருமபுரம் ஆதீன மடத்தில் தொலைந்து போன மரகத லிங்கத்தின் படத்துடன் ஒப்பிட்டு பார்த்து உறுதி செய்தனர். இதனை திருக்குவளை மரகதலிங்கத்தை ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு தருமபுரம் ஆதீனம் வேண்டுகோள் விடுத்துள்ளளார்.

தஞ்சாவூரில், கல்வி நிறுவன அதிபரின் வங்கி லாக்கரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 500 கோடி ரூபாய் மதிப்புள்ள பச்சை நிற மரகத லிங்கத்தை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டனர்.

இதுதொடர்பாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி, காவல் கண்காணிப்பாளர் பொன்னி ஆகியோர், சென்னை அசோக் நகரில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவுதலைமை அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தஞ்சாவூர் அருளானந்த நகர் 7-வது குறுக்குத் தெருவில் உள்ள வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிவன் சிலை பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக ரகசியதகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட வீட்டுக்கு சென்று, அங்கிருந்த என்.எஸ்.அருண பாஸ்கர் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர், தனது தந்தைசாமியப்பன் வசம், தொன்மையான பச்சை மரகத லிங்கம் ஒன்று இருப்பதாகவும், அதை தற்போது வங்கி லாக்கரில் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். அந்த சிலை அவரது தந்தையிடம் எப்படி வந்தது என்று கேட்டபோது, அதுதொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்தார். இதையடுத்து, அந்த தொன்மையான பச்சை மரகத லிங்கத்தை, வங்கி லாக்கரில் இருந்து எடுத்து வந்து எங்களிடம் ஒப்படைத்தார். அதை, அங்கீகாரம் பெற்ற மரகதக்கல் மதிப்பீட்டாளர்களிடம் காண்பித்தபோது அதன் மதிப்பு ரூ.500 கோடிக்கு மேல் இருக்கும் என தெரிவித்தனர்.

தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான தியாகராஜர் கோயிலில் 2016-ல் மாயமான லிங்கமா? இதற்கிடையே, கடந்த 2016 அக்.9-ம் தேதி நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான தியாகராஜர் கோயிலில் இருந்து மரகதலிங்கம் கொள்ளை போனது தொடர்பாக தருமபுர ஆதீன மடத்தின் கண்காணிப்பாளர் சவுரிராஜன் திருக்குவளை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கில் துப்பு துலங்காத நிலையில், தற்போது மீீட்கப்பட்டுள்ள மரகத லிங்கச் சிலை, கொள்ளை போன சிலையா என்ற கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த சிலையை வைத்திருந்த சாமியப்பன் மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார். அவர் குணம்அடைந்தவுடன் விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்புவோம். விசாரணை முடிந்த பிறகு, குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள். சாமியப்பனிடம் சிலை எப்படி வந்தது, சர்வதேச சிலை கடத்தல் கும்பலுடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என்றும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.ரூ.50 ஆயிரம் பரிசு பொக்கிஷமான பச்சை நிற மரகத லிங்கத்தை மீட்ட, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு, டி.ஜி.பி., சைலேந்திர பாபு புத்தாண்டு பரிசாக 50 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.

இந்நிலையில் இது குறித்து தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியதாவது :- முசுகுந்த சக்கரவர்த்தியால் பெறப்பட்ட சப்த விடங்க ஸ்தலங்கள் லிங்கங்கள் எனப்படும் ஏழு லிங்கங்கள் திருக்குவளை, நாகப்பட்டினம், வேதாரண்யம், திருநள்ளாறு உள்ளிட்ட ஆலயங்களில் வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டு திருக்குவளையில் வைத்து பூஜிக்கப்பட்ட மரகதலிங்கம் திருடப்பட்டது. இதுகுறித்து சிலை தடுப்பு காவல் துறையினர் தீவிர புலன் விசாரணை செய்யப்பட்டதில், தஞ்சையைச் சார்ந்த ஒருவரது வங்கி லாக்கரில் மரகத லிங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது திருக்குவளையில் திருடப்பட்ட மரகத லிங்கம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. பல நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த லிங்கம் அவனிவிடங்கர் என்று அழைக்கப்படுகிறது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருக்குவளை ஆலயத்தில் இருந்து திருடப்பட்ட இந்த லிங்கத்தை மீண்டும் திருக்குவளை ஆலயத்திற்கு வழங்க வேண்டும் என்று தருமபுர ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிலை தடுப்பு டிஐஜி இந்த லிங்கம் திருக்குவளை ஆலயத்திற்கு சொந்தமானது என்பதை தங்களிடம் விசாரித்து உறுதி செய்து கொண்டதாகவும், இந்த லிங்கத்தை தங்களிடம் ஒப்படைத்து நித்திய பூஜைக்கு வழிவகை செய்யவேண்டும் என்று தருமபுரம் ஆதீனம் விடுத்துள்ள வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.

Leave your comments here...