தடுப்பூசி போடாத சுற்றுலா பயணியர் திருப்பி அனுப்பிய புதுச்சேரி அரசு..!

சமூக நலன்

தடுப்பூசி போடாத சுற்றுலா பயணியர் திருப்பி அனுப்பிய புதுச்சேரி அரசு..!

தடுப்பூசி போடாத சுற்றுலா பயணியர் திருப்பி அனுப்பிய புதுச்சேரி அரசு..!

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அரசு அனுமதி அளித்திருந்தது. இதனால், பல மாநிலங்களில் இருந்தும், சுற்றுலா பயணியர் புதுச்சேரியில் குவிந்தனர். கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்ட சுற்றுலா பயணியரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என, புதுச்சேரி அரசு உத்தரவிட்டு இருந்தது.

இதையடுத்து, புதுச்சேரி மாநில எல்லைகளில் போலீசாரும், சுகாதார துறையினரும் இணைந்து நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.கோரிமேடு எல்லையில், வெளியூர்களில் இருந்து வந்த சுற்றுலா பயணியர் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் வைத்துள்ளனரா என்று சோதனை செய்யப்பட்டது.

தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் இல்லாத, சான்றிதழை காண்பிக்காத சுற்றுலா பயணியர் திருப்பி அனுப்பப்பட்டனர். சிலருக்கு சோதனை செய்யும் இடத்திலேயே, தடுப்பூசி செலுத்தி புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக புதுச்சேரியில் குவிந்த சுற்றுலா பயணிகள் பலர், முகக்கவசம் அணியாமல் நகர பகுதியில் சுற்றி திரிந்தனர். கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களில், முகக்கவசம் அணியாமல் சென்ற சுற்றுலா பயணியருக்கு அபராதம் விதிக்கப்பட்டு 100 ரூபாய் வசூலிக்கப்பட்டது.

Leave your comments here...