கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கும் தமிழக அரசின் அரசாணைக்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை..!

சமூக நலன்

கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கும் தமிழக அரசின் அரசாணைக்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை..!

கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கும் தமிழக அரசின் அரசாணைக்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை..!

தமிழக அரசு கடந்த ஆகஸ்டு 30-ந்தேதி பிறப்பித்த அரசாணையில், அரசு புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த அரசாணையை எதிர்த்து ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘இந்த அரசாணையால் கோவில் நிலங்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்தவர்கள் பயன் அடைவார்கள். அவர்களுக்காகவே இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனவே அரசாணையை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் விசாரித்து, பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். இதன்படி, தமிழக அரசும் பதில் மனு தாக்கல் செய்தது. அதில், ‘ஆட்சேபம் இல்லாத அரசு புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் வகையில் தான் அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆட்சேபனை இருந்தால் அந்த நிலங்கள் அடையாளம் காணப்பட்டு ஆக்கிரமிப்பு அகற்றப்படும். கோவில் நிலங்களை பொறுத்தவரை மாவட்ட வாரியாக, கோவில் வாரியாக கருத்துருக்கள் வகுக்கப்பட்டு, அறநிலையத்துறை ஆணையர் மூலமாக அரசுக்கு அனுப்பி அதன் பிறகே முடிவு எடுக்கப்படும். கோவிலுக்கு தேவைப்படாத நிலங்களை ஏழை மக்களுக்கு வழங்குவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. அரசாணையால் பக்தர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது’ என்று கூறியிருந்தது.

இதன் பிறகு பல்வேறு கட்டங்களாக விசாரணை செய்யப்பட்ட இந்நிலையில் நவம்பர் 18 ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது:- அப்போது, கோயில் நிலங்களில் எவ்வளவு ஆக்கிரமிப்பில் உள்ளது என்ற விவரம் தெரியாமல் பட்டா வழங்கும் அரசாணையை அமல்படுத்த முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது.மேலும் அறநிலையத்துறை அதிகாரிகள் அரசின் ஊதுகுழலாகவும், பொம்மைகளாகவும் தான் இருக்கிறார்கள் என்று தெரிவித்த உயர்நீதிமன்றம், அரசாணை ஒரு மதத்திற்கான வழிபாட்டுதலங்களுக்கு மட்டும் தான் பொருந்துமா ? பிற மத தலங்களுக்கு கிடையாதா ?அரசாணை மூலம் கோயில் நிலங்களை விற்க அறநிலையத்துறையை அரசு வற்புறுத்துகிறதா ? என்றும் கேள்வி எழுப்பியது.இதையடுத்து வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று  காலை 10.30 மணிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பில்:-  கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கும் தமிழக அரசின் அரசாணைக்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கும் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யக்கோரி ராதாகிருஷ்ணன் எனபவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave your comments here...