போதைப்பொருளை ஒழிக்க தேசிய அளவில் நடவடிக்கை – மத்திய உள்துறை அமித்ஷா வலியுறுத்தல்

இந்தியா

போதைப்பொருளை ஒழிக்க தேசிய அளவில் நடவடிக்கை – மத்திய உள்துறை அமித்ஷா வலியுறுத்தல்

போதைப்பொருளை ஒழிக்க தேசிய அளவில் நடவடிக்கை – மத்திய உள்துறை அமித்ஷா வலியுறுத்தல்

போதைப் பொருளை நாட்டிலிருந்து ஒழிப்பதை நோக்கமாக கொண்டு போதைப் பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு சார்பில் டெல்லியில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

இதில் மத்திய மற்றும் பல்வேறு மாநில அரசு துறை செயலாளர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், போதைப் பொருளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா ஆய்வு செய்தார்.

பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், ‘‘கடந்த 20 ஆண்டில் போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் எண்ணிக்கை 7 மடங்காக அதிகரித்துள்ளது. நமது குழந்தைகள் மற்றும் இளைஞர்களைப் பாதுகாக்க, போதைப்பொருள் மற்றும் அதன் தீமைகளுக்கு எதிரான விழிப்புணர்வை கல்விப் பாடத்திட்டத்தில் இணைத்து இளம் வயதிலேயே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எல்லைகளைத் தாண்டிய இந்தப் பிரச்சனையைச் சமாளிக்க மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு நிறுவனங்களுக்கு இடையே நெருக்கமான ஒருங்கிணைப்பு தேவை.இவ்வாறு அவர் கூறினார்.

TAG : Drug trafficking | Union Home Minister Amit Shah |Anti-narcotics task force|

Leave your comments here...