அன்னை தெரசா மிஷனரீஸ் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கவில்லை – மத்திய உள்துறை அமைச்சகம்..!

இந்தியா

அன்னை தெரசா மிஷனரீஸ் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கவில்லை – மத்திய உள்துறை அமைச்சகம்..!

அன்னை தெரசா மிஷனரீஸ்   நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கவில்லை – மத்திய உள்துறை அமைச்சகம்..!

மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டியின் எந்தக் கணக்குகளையும் உள்துறை அமைச்சகம் முடக்கவில்லை என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் 2010 மற்றும் வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறை விதிகள் 2011-ன் கீழ் உள்ள தகுதி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாததற்காக மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டியின் வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழான புதுப்பித்தல் விண்ணப்பம் 25 டிசம்பர் 2021 அன்று நிராகரிக்கப்பட்டது.

இந்தப் புதுப்பித்தல் மறுப்பை மறு ஆய்வு செய்ய மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி இடமிருந்து கோரிக்கை / சீராய்வு விண்ணப்பம் எதுவும் பெறப்படவில்லை.வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் பதிவு எண் 147120001-ல் மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி பதிவு செய்யப்பட்டது, அக்டோபர் 31, 2021 வரை அதன் பதிவு செல்லத்தக்கதாக இருந்தது. பின்னர், புதுப்பித்தல் விண்ணப்பம் நிலுவையில் உள்ள பிற வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டச் சங்கங்களுடன் சேர்த்து 31 டிசம்பர் 2021 வரை இதன் பதிவு நீட்டிக்கப்பட்டது.

இருந்தபோதிலும், மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டியின் புதுப்பித்தல் விண்ணப்பத்தை பரிசீலிக்கும் போது, சில பாதகமான உள்ளீடுகள் கவனிக்கப்பட்டன. பதிவில் உள்ள இந்த உள்ளீடுகளைக் கருத்தில் கொண்டு, புதுப்பித்தல் விண்ணப்பம் அங்கீகரிக்கப்படவில்லை. மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டியின் வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டப் பதிவு டிசம்பர் 31, 2021 வரை செல்லுபடியாகும்.

மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டியின் எந்தக் கணக்குகளையும் உள்துறை அமைச்சகம் முடக்கவில்லை. தனது கணக்குகளை முடக்குமாறு பாரத ஸ்டேட் வங்கிக்கு மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டியே கோரிக்கையை அனுப்பியுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.

Leave your comments here...