ஜன-3 முதல் 15-18 வயதுள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி.. முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு..!

இந்தியா

ஜன-3 முதல் 15-18 வயதுள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி.. முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு..!

ஜன-3 முதல் 15-18 வயதுள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி.. முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு..!

ஜனவரி 3 ஆம் தேதி முதல் 15-18 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பரவல் முடிந்து வரும் நிலையில், அதிக வீரியமுள்ள கோவிட் வைரஸ் நவ.24ல் தென் ஆப்ரிக்காவில் முதலில் தென்பட்டது. இதற்கு ஒமைக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவில்தொற்று தடுப்பு நடவடிக்கையாக மஹாராஷ்டிரா, குஜராத், உ.பி., அரியானா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் இன்று (டிச.25) இரவு 9.45 மணியளவில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை விவரம்:

* நாட்டு மக்களுக்கு கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்.

* உலக நாடுகளில் ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. நம் நாட்டிலும் ஒமைக்ரான் தொற்று பலருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

* இந்நேரத்தில் நாம் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

* ஒமைக்ரான் தொற்று பரவல் குறித்து பொதுமக்கள் யாரும் பதற்றம் அடைய வேண்டாம்.

* முகக்கவசம் அணிவது, கைகளை அவ்வப்போது நன்றாக சோப்பு போட்டு கழுவுவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்றவற்றை நாம் மறந்துவிடக்கூடாது.

* கொரோனாவை எதிர்த்து போராட அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் செயல்பட்டு வருகின்றன.

* இந்தியாவில் 8 லட்சம் தனிமைப்படுத்துதல் படுக்கைள், 5 லட்சம் ஆக்ஸிஜன் படுக்கைகள், தயார் நிலையில் உள்ளன.

* மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

* இந்தியாவில் குழந்தைகளுக்கு கொரோனா சிகிச்சை அளிக்க சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

* கடும் சவால்களுக்கிடையே தடுப்பூசி திட்டம் மிகவும் பாதுகாப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

* உலகின் முதல் டி.என்.ஏ.தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

* இந்தியாவில் தற்போது வரை ஆக்ஸிஜன் பற்றாக்குறை, படுக்கை பற்றாகுறை இல்லை.

* மூக்கு வழியாக கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் முறைகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.

* இந்திய பொருளாதாரம் சீரான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

* ஜன.3 தேதி முதல் 15-18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

* ஜன.10 தேதி முதல் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ், செலுத்தப்படும்.

* இந்தியாவில் பல கொரோனா தடுப்பூசிகள் செயல்பாட்டிற்கு வர உள்ளன.

* கொரோனாவை தடுக்கும் மிகப்பெரிய ஆயுதமாக தடுப்பூசி உள்ளது. மரபணு தடுப்பூசி விரைவில் செலுத்தப்படும்.*60 வயது மேற்பட்டவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. கொரோனா தடுப்பு பணிகளில் நாம் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறோம். நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக இயல்புநிலை திரும்பி வருகிறது. வளர்ச்சி பாதையில் செல்கிறது.மாநில அரசுகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்துவருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

Leave your comments here...