குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து – ஹெலிகாப்டரில் பறந்தபடி ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்..!

தமிழகம்

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து – ஹெலிகாப்டரில் பறந்தபடி ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்..!

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து – ஹெலிகாப்டரில் பறந்தபடி ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்..!

குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தில் 16 நாட்களுக்கு பிறகு மீண்டும் அதிகாரிகள் ஹெலிகாப்டரில் பறந்து ஆய்வு நடத்தினர்.

குன்னூர் நஞ்சப்பசத்திரம் பகுதியில் கடந்த 8ம் தேதி எதிர்பாராத வண்ணம் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி மதுலிகா ராவத் உள்பட 14 பேர் உயிரிழந்துவிட்டனர். இது தொடர்பாக ஏர் மார்ஷல் மன்வேந்திர் சிங் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விபத்து நடந்து 16 நாட்களுக்கு பிறகு விமானப்படை அதிகாரிகள் ஹெலிகாப்டரில் 5 முறை வானில் வட்டமடித்து ஆய்வு செய்தனர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் எஞ்சிய பாகங்களை மற்றொரு ஹெலிகாப்டரின் உதவியுடன் எடுத்துச்செல்ல திட்டமிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 16 நாட்களுக்கு பிறகு அதிகாரிகள் ஹெலிகாப்டர் மூலம் வானில் வட்டமடித்து ஆய்வு செய்தது அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த விபத்து குறித்து தமிழ்நாடு காவல்துறை சார்பில் ஏ.டி.எஸ்.பி. முத்துமாணிக்கம் தலைமையில் விசாரணை நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...