நடிகர் விஜய்யின் உறவினர்..! ‘மாஸ்டர்’ பட தயாரிப்பாளர் வீட்டில் வருமான வரி சோதனை..!

சினிமா துளிகள்

நடிகர் விஜய்யின் உறவினர்..! ‘மாஸ்டர்’ பட தயாரிப்பாளர் வீட்டில் வருமான வரி சோதனை..!

நடிகர் விஜய்யின் உறவினர்..! ‘மாஸ்டர்’ பட தயாரிப்பாளர் வீட்டில் வருமான வரி சோதனை..!

நடிகர் விஜயின் உறவினரும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர். சென்னை அடையாறில் உள்ள சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்துகிறது.

இந்த நிலையில் பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட வேறு சில நகரங்களிலும் சீன நிறுவனமான ஷியோமி ( xiaomi)க்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. இதில் ஷியோமி ஏற்றுமதி இறக்குமதி செய்யும் நிறுவனங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. ஷியோமி சார்பாக யாரெல்லாம் இந்தியாவில் ஏற்றுமதி, இறக்குமதி செய்கிறார்கள் என்று லிஸ்ட் எடுக்கப்பட்டது.

இந்த ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்களில் இன்று வருமானவரித்துறை ரெய்டு நடக்கிறது. இந்த நிலையில்தான் ஷியோமி போன்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் காரணத்தால் மாஸ்டர் படத் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. ஷியோமி போன் உதிரிபாகங்களை ஏற்றுமதி இறக்குமதியை கையாள்வதில் பிரிட்டோவின் நிறுவனம் ஈடுபட்டு வருவதால் இந்த ரெய்டு அங்கு முடுக்கிவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சேவியர் பிரிட்டோ நடிகர் விஜய்யின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. செல்போன் நிறுவன ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான சில நிறுவனங்களை இவர் நடத்தி வருகிறார். சேவியர் பிரிட்டோ திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர் ஆவார். XB Film Creators என்ற பெயரில் இவர் தனது தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். மாஸ்டர் படத்தை இவர்தான் தயாரித்துள்ளார். விஜய் உடன் “செந்தூரபாண்டி”, “தேவா”, “ரசிகன்” போன்ற படங்களுக்கு தயாரிப்பாளராக பணியாற்றி உள்ளார். மாஸ்டர் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் வீட்டிலும் ரெய்டு நடந்தது குறிப்பிடத்தக்கது

Leave your comments here...