பள்ளி தேடி டி.பி.டி தடுப்பூசி : தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கான தடுப்பூசி முகாம்.!

தமிழகம்

பள்ளி தேடி டி.பி.டி தடுப்பூசி : தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கான தடுப்பூசி முகாம்.!

பள்ளி தேடி டி.பி.டி தடுப்பூசி :  தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கான தடுப்பூசி  முகாம்.!

தேவகோட்டை – தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கன தடுப்பூசி முகாம் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.

தமிழக அரசால் ஐந்து வயது மற்றும் பத்து வயது முடிந்த மாணவர்களுக்கு டி .டி .மற்றும் டி.பி.டி .தடுப்பூசி டெட்டனஸ் மற்றும் கக்குவான் இருமலை தடுக்கும் பொருட்டு போடப்படுகிறது. முகாமிற்கு தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் .நேரடியாக பள்ளிக்கே வந்து தடுப்பூசி போடும் திட்டத்தின் கீழ் தேவகோட்டை நகராட்சி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் மேரி அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசியை போட்டார்.முகாமிற்கான ஏற்பாடுகளை ஆசிரியை செல்வமீனாள் செய்து இருந்தார்.பெற்றோர்களும் முகாமில் பங்கேற்றனர்.

Leave your comments here...