பனை விதை விதைக்கும் கல்லூரி மாணவ மாணவிகள் : சான்றிதழ்கள் வழங்கி பாரா அறக்கட்டளை.!

உள்ளூர் செய்திகள்சமூக நலன்

பனை விதை விதைக்கும் கல்லூரி மாணவ மாணவிகள் : சான்றிதழ்கள் வழங்கி பாரா அறக்கட்டளை.!

பனை விதை விதைக்கும் கல்லூரி மாணவ மாணவிகள் :  சான்றிதழ்கள் வழங்கி பாரா அறக்கட்டளை.!

மதுரை பொட்டபாளயம் கே.எல்.என். பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாணவ மாணவிகளை ஈடுபடுத்தி பனை விதைகள் நடும் நிகழ்ச்சி வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு வழிகாட்டுதல்படி தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தலைமையேற்று பனை விதைகள் மற்றும் பனை மரங்களின் பயன்களையும் அதன் தன்மைகளையும் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளக்கினார்.

மேலும் மாணவ மாணவிகள் தொடர்ந்து பல பசுமைப் பணிகளையும், சமூக சேவைகளையும் மேற்கொண்டு இயற்கைக்கும் மனிதர்க்கும் பயன்பட்டு வாழ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மாணவ மாணவிகள் ஆர்வமாக கேட்டதோடு கல்லூரி வளாகத்தில் பனை விதைகளை சிறப்பாக விதைத்தனர்.

அனைவரையும் ஊக்கப்படுத்தும் வகையில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.முன்னிலை வகித்த கல்லூரி முதல்வர் முனைவர் ராம்பிரசாத் உள்ளிட்ட பேராசிரியர்களும் பனைவிதைகளை விதைத்து மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தினர். பேராசிரியர்கள், தோட்ட உதவியாளர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் பெரியதுரை, கார்த்தி, சந்திரன் உள்ளிட்டோர் களப்பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் கல்லூரியின் நாட்டு நலத்திட்ட அதிகாரியுமான அரவிந்தராஜன் பனை விதைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கிய வழிகாட்டி மணிகண்டன் உள்ளிட்ட பங்கேற்ற அனைவருக்கும் நன்றி கூறினார்.

Leave your comments here...