ஏழைகளின் நலனுக்காக உழைத்து வருகிறோம். அவர்களின் நலனே எங்களின் இலக்கு – பிரதமர் மோடி

இந்தியா

ஏழைகளின் நலனுக்காக உழைத்து வருகிறோம். அவர்களின் நலனே எங்களின் இலக்கு – பிரதமர் மோடி

ஏழைகளின் நலனுக்காக உழைத்து வருகிறோம். அவர்களின் நலனே எங்களின் இலக்கு – பிரதமர் மோடி

உத்தர பிரதேசம் சென்றுள்ள பிரதமர் மோடி ஷாஜகான்பூரில் நடந்த விழாவில் 549 கி.மீ., தொலைவு கொண்ட கங்கா எக்ஸ்பிரஸ்வேக்கு அடிக்கல் நாட்டினார்

பின்னர் பேசியதாவது: மீரட், ஹபுர், புலந்த்ஷர், அம்ரோஹா, சம்பல், பதவான், ஷானகான்பூர், ஹர்தோய், உன்னாவ், ரேபரேலி, பிரதாப்கார்க் மற்றும் பிரயாக்ராஜ் மக்கள் அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். 600 கி.மீ., தூரம் எக்ஸ்பிரஸ்வே திட்டத்திற்கு சுமார் ரூ.36 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

கங்கா எக்ஸ்பிரஸ்வே காரணமாக, இந்த பிராந்தியத்தில் புதிய தொழிற்சாலைகள் வரும். ஆயிரகணக்கான இளைஞர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளும், புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பு வசதிகளுடன் நவீன தொழில்முறை மாநிலமாக உ.பி., மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை. இங்கு அமைக்கப்பட்ட எக்ஸ்பிரஸ்வே, விமான நிலையங்கள், ரயில் பாதைகள் மூலம் ஏராளமான மக்களின் ஆசி கிடைத்துள்ளது.

உ.பி.,யில் இன்று பயன்பாட்டிற்கு வந்துள்ள நவீன உள்கட்டமைப்பானது, வளங்கள் நல்ல முறையில் பயன்படுத்தப்படுகிறது என்பதை எடுத்து காட்டுகிறது. முன்னர், பொது மக்களின் பணம் எப்படி பயன்படுத்தப்பட்டது என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால், இன்று உங்களது பணம் மாநிலத்தின் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. முந்தைய காலங்களில் பெரிய திட்டங்கள், காகிதங்களில் மட்டுமே ஆரம்பிக்கப்பட்டது.

இதனால், முந்தைய ஆட்சியாளர்களின் கஜானா நிரம்பியது. ஆனால், இன்று அந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதனால், மக்களின் பணம் பாதுகாக்கப்பட்டுள்ளது. உங்களின் பணம் உங்களின் பைகளிலேயே உள்ளது. முந்தைய காலத்தில் மோசமான சட்டம் ஒழுங்கு காரணமாக பொது மக்களின் சொத்துகள் கொள்ளையடிக்கப்பட்டன. இன்று, மாபியாக்கள் சொத்துகள் இடித்து தள்ளப்படுகின்றன. ஏழைகளின் நலனுக்காக உழைத்து வருகிறோம். அவர்களின் நலனே எங்களின் இலக்கு. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Leave your comments here...